ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள அசிங்கமான தழும்புகள் மறைய செய்ய வேண்டியவை

Report Print Jayapradha in அழகு

முகத்தில் பருக்கள் பிரச்சினை பெரிய தொல்லையாக இருக்கிறது. பரு நீங்கினாலும், அந்த இடத்தில் தழும்புகள் ஏற்பட்டு முகமே அசிங்கமாகி விடுகிறது.

அத்தகைய முகப்பரு மற்றும் தழும்புகளை விரைவில் போக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

கடைபிடிக்க வேண்டியவை
 • எண்ணெய்ப் பசை மற்றும் பருப்பிரச்னை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு பதிலாக நான்கு முறை கழுவலாம். மேலும் சோப்பிற்கு பதில் பேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது.
 • உணவில் நிறைய காய்கறிகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து அதிகம் உள்ள வெந்தயம், கறிவேப்பிலை, பச்சை காய்கறிகள், கீரை வகைகள் அதிகம் உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
 • மலச்சிக்கல் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எனவே எண்ணெய்யில் பொரித்த உணவுகள், காரமான மற்றும் அதிகம் மசாலாக்கள் கொண்டு உணவுகளை தவிர்க்க வேண்டும்.
 • சரும நிபுணரின் உதவியுடன் பருக்கள் மறுபடியும் ஏற்படாமல், தழும்புகள் தோன்றாமல் இருக்க பீல் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
 • மேலும் ஒருவர் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதால் சருமத்தில் நீர்சத்து அதிகரித்து சருமம் வறண்டு போகாது.
முக தழும்புகள் போக
 • தினமும் ஒரு கைப்பிடி துளசியை மிதமான சுடுதண்ணீரில் போட்டு ஊறவைத்து பின் இந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் பருக்கள் இரண்டு நாட்களில் காய்ந்து உதிர்ந்துவிடும்.
 • துளசியுடன் 2 டீஸ்பூன் அரிவு மாவு 2 டீஸ்பூன் வெள்ளரி சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலந்து பருக்கள் மற்றும் தழும்பு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து சாதாரண தண்ணீரில் கழுவலாம்.
 • தினமும் 1 டீஸ்பூன் வேப்பிலை பவுடர், பன்னீர், முல்தானி மெட்டி 2 டீஸ்பூன் கலந்து சருமத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் பருக்கள் குறையும்.
 • நிலவேம்பு 1 டீஸ்பூன், உரசிய சந்தனம் 1 டீஸ்பூன், முல்தாணி மெட்டி 1 டீஸ்பூன், பன்னீருடன் கலந்த முகத்தில் பத்து போடுவதைப் போல் போட்டு இரண்டு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவலாம்.
 • ஒரு பூண்டு பல்லை இரண்டாக வெட்டி, அதனை முகத்தில் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.
 • எலுமிச்சை சாறு மற்றும் தயிரை சரிசம அளவில் எடுத்து, ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதாலும் சருமத்தில் உள்ள பிரச்சனைகள் அகலும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers