நெல்லிக்கனி சாற்றை முகத்தில் தேய்த்தால் இவ்வளவு நன்மைகளா?

Report Print Jayapradha in அழகு
நெல்லிக்கனி சாற்றை முகத்தில் தேய்த்தால் இவ்வளவு நன்மைகளா?

மருத்துவ குணங்கள் நிறைந்த நெல்லிக்கனி ஏழைகளின் ஆப்பிள் என்றும் அழைக்கப்படும். நெல்லி கனியில் வைட்டமின் சி இரும்பு, கால்சியம் உட்பட பல சத்துகள் அதிக அளவில் நிறைந்திருக்கும்.

நெல்லி கனியை ஜூஸ் ஆகவோ அல்லது ஊறுகாயாகவோ தான் பெரும்பாலானோர் பயன்படுத்துவார்கள். ஆனால் இதன் சாற்றை சருமத்தை பொலிவு பெற எப்படி பயன்படுத்த முடியும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

முகத்தில் நெல்லிக்கனி சாற்றை பயன்படுத்துவது எப்படி?

  • முகத்தில் இருக்கும் கருப்பு நிற பருக்களை அடியோடு நீக்கும் தன்மை நெல்லிக்கனியில் உள்ளது. மேலும் முகத்தில் இருக்கும் கருவளையம் மற்றும் சருமத்தின் மங்கிய தன்மை ஆகியவற்றை நீக்கவும் நெல்லிக்கனி பயன்படுகிறது.

  • 2- 3 நெல்லிக்கனியை எடுத்து அதனை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி அதன் சாற்றை தினமும் முகத்தில் தடவி அரை மணி நேரத்திற்கு பின் கழுவினால் சில நாட்களில் சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை பார்க்கலாம்.

நெல்லிக்கனி சாற்றின் நன்மைகள்

  • நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும்.

  • நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகிவிடும்.

  • நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.

  • நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

  • சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.

  • முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.

  • ஜீரணக்கோளாறு, பித்த மயக்கம், ஆரோடசிகம், காமாலை, கண்நோய், இரத்தசோகை போன்றவைகளுக்கு நெல்லிக்காய் மருந்தாகும் இதனை ஊறுகாயாக செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments