முகம் சுருக்கமாக இருக்கிறதா? இதோ இருக்கிறது ஐஸ்கட்டி

Report Print Jayapradha in அழகு

அலைச்சல், தூக்கமின்மை, தூசி, மாசுக்கள் போன்றவற்றால் நம்முடைய முகம் மிக வேகமாகவே பொலிவை இழந்து விடுகிறது. சருமத்தின் சோர்வுகளை ஐஸ் கட்டி கொண்டு நீக்கி விடலாம்

தினமும் ஐஸ்கட்டிகளை கொண்டு முகத்தை மசாஜ் செய்தால் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

ஐஸ்கட்டியின் பயன்கள்

  • முகப்பருவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 15 நிமிடங்கள் ஐஸ்கட்டியை கொண்டு மசாஜ் செய்தால் சருமத்தில் உள்ள எண்ணைப்பசை நீங்கி, சருமம் மிருதுவாகிறது.

  • முகத்தில் இருக்கும் முகப்பருக்கள் மறைந்தாலும், அதன் தழும்புகள் கருப்பாக முக அழகை கெடுக்கும். தினமும் 15 நிமிடங்கள் தழும்புகள் உள்ள இடங்களில் ஐஸ்கட்டிகளை கொண்டு அழுத்தம் தருவதால், தழும்புகள் மறையும்.

  • தொடர்சியாக ஐஸ்கட்டிகளை சருமத்தில் அழுத்துதல் மற்றும் தேய்த்தல் மூலம் சருமத்தின் துளைகளை அகற்ற முடியும்.

  • வாரம் ஒருமுறை ஸ்ட்ராபெரி அல்லது வெள்ளரிக்காயை அரைத்து, அதனை ஐஸ்கட்டியாகும் வரை குளிவிக்க வேண்டும். இந்த ஐஸ்கட்டியை முகத்தில் மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் முகம் பொலிவடையும்.

  • வெயிலினால் உங்கள் முகம் சோர்வாக, கலை இழந்து இருக்கும். அப்போது ஐஸ்கட்டிகளை கொண்டு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதால், முகத்தில் குளிர்ச்சி ஏற்பட்டு முகம் பளிச்சென்று இருக்கும்.

  • கண்களை அழகாக்க, காட்டன் துணியில் ஐஸ்கட்டியை வைத்து, தினமும் காலையில் கண்களை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.

  • ரோஸ் வாட்டர் மற்றும் வெள்ளரிக்கயை அரைத்து செய்யப்பட்ட ஐஸ்கட்டி ஆகியவற்றை கொண்டு மசாஜ் செய்தால், கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் படிப்படியாக மறைவதை காணலாம்.

  • முகத்தில் எண்ணெய் வடிதல் ஆனது பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை. இதிலிருந்து விடுபட ஐஸ்கட்டியால் மசாஜ் செய்வது நல்ல பலனை தரும்

  • ஐஸ்கட்டிகள் மூலம் மசாஜ் செய்வதால், இரத்த ஓட்டம் அதிகரித்து முகம் சுருக்கமாவது குறைகிறது. இது முகத்திற்கு உண்மையான பொலிவை தருகிறது.

  • முகத்தில் உள்ள தடிப்புகள் எரிச்சலை உண்டாக்கும். இதனால் முகம் சிவந்து காணப்படும். இதனை சரிசெய்ய முகத்தில் ஐஸ்கட்டியை கொண்டு அழுத்தி எடுக்கவும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...