உங்களுக்கு எண்ணெய் பசை கூந்தலா? இதோ இயற்கையான தீர்வு

Report Print Jayapradha in அழகு

சிலரின் கூந்தல் எப்போழுதும் எண்ணெய் பசையுடன் காணப்படும். இதற்கு காரணம் நம் மண்டைப் பகுதியில் உள்ள செபேஷியஸ் சுரப்பிகளின் தூண்டலே.

செபேஷியஸ் சுரப்பி சுரக்கும் சீபமானது அளவுக்கதிகமாக சுரந்தால் கூந்தல் அதிக எண்ணெய் பசையுடன் காணப்படுவது போல் தோற்றம் பெறும்.

சிலருக்கு எண்ணெய் பசை கூந்தலின் விளைவினால், எண்ணெய் வழிகிற சருமப் பிரச்னையும் சேர்ந்து கொள்வதுண்டு, இதனை சரிசெய்யும் சில இயற்கை முறைகளைப் பற்றி பார்ப்போம்.

எண்ணெய் பசையை போக்கும் இயற்கை முறைகள்
  • பேக்கிங் சோடாவையும், தண்ணீரையும் பேஸ்ட் மாதிரி கலந்து தலையில் முடியின் வேர்க்கால்களில் தடவி பிறகு 15-20 நிமிடங்கள் கழித்து உங்கள் ஷாம்பை கொண்டு அலசி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம், இதை முடியில் தடவக் கூடாது, வாரத்திற்கு ஒரு முறை இதை செய்து வரலாம்.
  • கற்றாழை ஜெல்லை தலையில் நன்றாக தடவி பின்பு 15 நிமிடங்கள் நன்றாக காய வைத்த பிறகு ஷாம்பு கொண்டு அலசினால் நல்ல மென்மையான பட்டு போன்ற கூந்தலை பெறலாம்.
  • சிறிதளவு தண்ணீருடன் சிறிதளவு ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து தலையில் அப்ளை செய்து, நன்றாக காய்ந்த உடன் ஷாம்பு போட்டு அலசினால் தலையில் உள்ள எண்ணெய் பசையை போக்குவதோடு பொடுகுத் தொல்லையையும் அறவே ஒழிக்கிறது.
  • தலை குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்னதாக லெமன் ஜூஸை அப்ளை செய்து கொண்டு பின்பு தலையை ஷாம்பு போட்டு அலசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • க்ரீன் டீ தலை சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை அளிப்பதால் இதனை தலையில் தடவி அரை மணிநேரம் அப்படியே வைத்திருந்து பிறகு ஷாம்பு குளித்தால் எண்ணெய் பசையைப் போக்குவதோடு கூந்தலை மென்மையாகப் பொலிவாக வைக்கவும் உதவுகிறது.
  • வாரத்திற்கு மூன்று முறை தக்காளிக்கூழை தலையில் தடவி அரை மணிநேரம் அப்படியே வைத்திருந்து பிறகு ஷாம்பு குளித்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers