வயதான தோற்றமா? இதோ உங்களுக்கான டிப்ஸ்

Report Print Jayapradha in அழகு

நீங்கள் இளவயதாக இருந்தாலும் கூட உங்களது முகத்தில் உள்ள சுருக்கங்கள் வயதானவர்களாக காட்டும்.

இதனால் உங்கள் அழகு குறைவதுடன், தோற்றத்தையும் வேறுபடுத்திக் காட்டும்.

வீட்டிலுள்ள இயற்கையான பொருட்களை கொண்டே இந்த தோற்றம் மறைந்து ஜொலிஜொலிக்க வைக்கலாம்.

எலுமிச்சை

எலும்பிச்சை சருமத்தில் உள்ள மெலனின் நிறமியை உடைத்து சருமத்திற்கு புத்துயிர் கொடுக்கிறது. எலும்பிச்சையை சிறு துண்டுகளாக்கி பாதிக்கப்பட்ட சருமத்தில் 20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு சாதாரண நீரில் கழுவவும், தோலில் உள்ள புள்ளிகள் மறையும் வரை இதை தினமும் தொடரலாம்.

இதனை முகத்திற்கு போட்ட பிறகு நீங்கள் சூரிய ஒளியில் செல்வதை தவிர்க்கவும். ஏனெனில் இது உங்கள் சருமத்தை மேலும் கருமையாக்கும். உங்கள் சருமம் சென்ஸ்டிவ் சருமமாக இருந்தால் எலும்பிச்சையை ரோஸ் வாட்டரில் கலந்து கொண்டு பயன்படுத்துங்கள்.

பட்டர் மில்க்

லாக்டிக் அமிலம் நிறைந்த பட்டர் மில்க் முகத்தில் உள்ள ஏஜ் ஸ்பாட்ஸ்யை நீக்கி சருமத்தை வெண்மையாக்குகிறது, இதனால் சருமத்திற்கு எந்த எரிச்சலும் ஏற்படாது.

ஒரு கப்பில் பட்டர் மில்க்கை எடுத்து கொண்டு அதில் காட்டன் பஞ்சை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும், 20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். எண்ணெய் சருமமாக இருந்தால் இதனுடன் எலும்பிச்சை ஜூஸ் கலந்து கொள்ளவும்.

வெங்காயம்
இறந்த செல்களை நீக்க வெங்காயத்தில் உள்ள சல்பர் ஒரு ஆன்டி செப்டிக் மாதிரி செயல்பட்டு சருமத்திற்கு புத்துயிர் தருகிறது.

வெங்காயத்தை வெட்டி பாதிக்கப்பட்ட சருமத்தில் 20 நிமிடங்கள் தடவ வேண்டும், அதன் வாசனை போன பிறகு தண்ணீரை கொண்டு கழுவவும், தினமும் இதை உங்கள் சருமத்தில் உள்ள ஏஜ் ஸ்பாட்ஸ் மறையும் வரை செய்யவும்.

பப்பாளி

பப்பாளியில் உள்ள என்ஜைம்கள் மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் போன்றவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்குகிறது.

பச்சை பப்பாளியை வெட்டி அதன் துண்டுகளை பாதிக்கப்பட்ட இடத்தில் 20 நிமிடங்கள் தேய்க்கவும், தினமும் இதை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் ஒரு அழற்சி எதிர்ப்பு பொருள் இது உங்கள் சருமத்தை மென்மையாக மற்றும் ஈரப்பதம் மிக்கதாக வைக்கிறது.

கற்றாழை ஜெல்லை எடுத்து அதன் ஜெல்லை பாதிக்கப்பட்ட சருமத்தில் 30 நிமிடங்கள் தேய்க்கவும், பிறகு நன்றாக நீரில் கழுவினால் முகம் பொலிவுடன் இருக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...