அந்தரங்க பகுதியில் கருமையா? இதோ டிப்ஸ்

Report Print Fathima Fathima in அழகு

பெரும்பாலானவர்களுக்கு அந்தரங்க பகுதிகள் கருமையாக இருக்கும்.

இதற்கு காரணம் மரபணுக்களே, அத்துடன் இறுக்கமான உள்ளாடைகள், சரும நோய்கள், தோல்கள் உரசிக் கொண்டே இருப்பதால் கருமையாகிறது.

இதுதவிர அதிகமான வியர்வையும், இறந்த செல்களின் தேக்கமும் கருமைக்கு காரணமாகின்றன.

அந்த இடங்களில் கண்ட கண்ட க்ரீம்களை பயன்படுத்தாமல் வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே வெள்ளையாக்கலாம்.

  • கற்றாழையின் ஜெல்லை எடுத்து, அதனை நேரடியாக கருமையாக இருக்கும் அந்தரங்க பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் தவறாமல் செய்து வந்தால், அந்தரங்க பகுதியில் உள்ள கருமை நீங்கும்.
  • 1/2 எலுமிச்சையின் சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள்.
  • 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன் 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அந்தரங்க பகுதியில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரால் கழுவ வேண்டும்.
  • தக்காளியின் ஒரு துண்டை எடுத்து, அந்தரங்க பகுதியில் 2 நிமிடங்கள் தேய்த்து, 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • ஒரு பௌலில் 1/2 எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அதில் 3-4 டீஸ்பூன் சந்தனப் பவுடர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும், கலவை கெட்டியாக இருந்தால் ரோஸ் வாட்டர் சேர்க்கலாம், இந்த கலவையை இரவில் படுக்கும் முன், கருமையாக உள்ள பகுதிகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுங்கள், கருமை போகும் வரை இதை செய்யலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்