முகம் வெள்ளையாக இதோ வழிகள்

Report Print Deepthi Deepthi in அழகு

சருமத்தை எப்போதும் பொலிவுடன், அழகாக பாதுகாக்க இயற்கையான தீர்வுகள் இதோ,

சரும நிறத்தை அதிகரிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்?
  • முகத்தில் படியும் தூசிகள் மற்றும் அழுக்குகளை நீக்க, அவ்வப்போது முகத்தை சுத்தமான நீரினால் கழுவிக் கொண்டே இருக்க வேண்டும்.
  • சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்கி, சருமத்தின் நிறத்தை அதிகரிக்க, இயற்கை பொருட்கள் கொண்ட ஃபேஸ் பேக், ஸ்கரப்கள் ஆகியவற்றை முகத்தில் அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.
  • எலுமிச்சையின் துண்டுகள் அல்லது அதன் சாற்றைக் கொண்டு, தினமும் முகத்தை சிறிது நேரம் தேய்த்து கழுவி வர, சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.
  • வாழைப்பழம், பப்பாளி, அவகேடோ போன்ற பழங்கள் சருமத்திற்கு பொலிவைத் தரக்கூடியவை. எனவே இத்தகைய பழங்களை சாப்பிடுவதோடு, சருமத்திற்கு தடவி வர வேண்டும்.
  • சூரியக் கதிர்களின் தாக்கத்தை தடுக்க, வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்த்து, வெயிலில் செல்லும் முன் சருமத்திற்கு சன் ஸ்கிரீன் லோஷனை தடவி, வீட்டிற்கு வந்ததும், சருமத்தை சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.
  • வெளியே சுற்றும் போது, தலைக்கு தொப்பி போட்டு செல்ல வேண்டும். இதனால் முகத்தில் சூரியக்கதிர்கள் நேரடியாக படுவதை தடுக்கலாம்.
  • தயிரைக் கொண்டு தினமும் முகத்திற்கு மசாஜ் செய்து கழுவி வந்தால், 7 நாட்களில் ஒரு நல்ல முகப்பொலிவினை பெறலாம்.
  • கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பளிச்சென்று மாறிவிடும்.
  • தினமும் அதிகப்படியான தண்ணீரை குடிப்பதுடன், உடற்பயிற்சிகளை மறக்காமல் செய்ய வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவுடன் இருக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்