உங்கள் நகம் அடிக்கடி உடைந்து விடுகின்றதா? கவலையை விடுங்க: இதை ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

பெண்களுக்கு தங்கள் கூந்தல் எவ்வளவு முக்கியமே அதைபோன்று தான் நகங்களும்.

பெண்கள் நகங்கள் நீளமாகவும் அழகுகாக இருப்பதற்காக நெயில் பாலிஷ் போட்டு தங்களது நகங்களை இன்னும் அழகுப்படுத்துவார்கள்.

இப்படிபட்ட நகம் உடைந்து விட்டால் கவலையாக இருக்கும். சிலருக்கு போதியளவு ஊட்டம் இல்லாத காரணத்தால் ஏதாவது சின்ன வேலை செய்தாலே நகங்கள் உடைந்து போய்விடும். இன்னும் சிலருக்கு நகங்கள் கடினத்தன்மையுடன் இருக்கும்.

நகங்கல் உடையாமலிருக்க கீழே சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்

  • எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
  • பாதாம் எண்ணெய் – அரை டீஸ்பூன்
  • லாவெண்டர் போன்ற ஏதாவது வாசனை எண்ணெய் – சில துளிகள்

பாதம் எண்ணெயை சூடுபடுத்தி, அதில் எலுமிச்சை சாறை விடவும். பின் வாசனை எண்ணெயை கலந்து ஒரு பஞ்சினால் நகத்தில் தேய்க்கவும். வாரம் 3 நாட்கள் இப்படி செய்யுங்கள். நகங்கள் உடையாது. பலம் பெறும். வேகமாகவும் வளரும்.

குறிப்பு - நகத்தின் ஓரங்களில் ஏதாவது தொற்று ஏற்பட்டால் கூட அது ரத்த நாளங்களை எளிதில் சென்றடையும். ஆகவே அடிக்கடி நெயில் பாலிஷ் போடாமல் நகத்தின் இடுக்களை சுவாசிக்க விடுங்கள்.

இயற்கையான மருதாணியை அரைத்து போடுவதால் நகங்களில் உண்டாகும் பாதிப்புகள் மறைந்துவிடும். நகங்களும் பொலிவுடன் காணப்படும்.

தினமும் நகங்களுக்கு பாதாம் எண்ணெயை இரவில் தூங்கப்போகும் முன் தடவி வாருங்கள். நகங்கள் ஊட்டம் பெறும்.

கடினமான நகங்கள் இருந்தால், ஆலிவ் எண்ணெயை நகங்களில் தடவி நீவி விட்டால் மென்மையாக மாறிவிடும்.

கால் விரல்களில் கைகளில் உள்ள நகங்களில் சிலருக்கு சொத்தை ஏற்படும். இதற்கு சிறந்த தீர்வு ரோஸ் வாட்டரை நகங்களுக்கு தடவி வாருங்கள். சொத்தை நகம் கீழே விழுந்து, புதிய நகம் முளைக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...