சிவப்பழகு பெற வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

பொதுவாக பெண்கள் சிவப்பழகினை பெறுவதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர்.

நீங்கள் வீட்டிலேயே இயற்கையான முறையில் பேஸ் பேக்குகளை செய்து பயன்படுத்தும் போது குறைவான செலவில் பக்க விளைவுகள் இல்லாத முக அழகை பெற முடியும்.

உங்கள் முகத்திற்கு தயிரும் வாழைப்பழ பேஸ் பெக் உடனடியான சிவப்பழகையும் பளிச்சென்ற பார்வையும் ஒரு நொடிப் பொழுதில் தந்து விடும்.

இந்த பேஸ் பெக்கை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • 1 பழுத்த வாழைப்பழம்.
  • 1 டேபிள் ஸ்பூன் யோகார்ட்.
பயன்படுத்தும் முறை
  • முதலில் உங்கள் முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு சுத்தம் செய்து உலர்த்தி கொள்ளுங்கள்
  • ஓரளவான பழுத்த வாழைப்பழத்தை எடுத்து கொள்ளுங்கள்.
  • தோலை உரித்து விட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.
  • 1/3 பங்கு யோகார்ட் இதனுடன் சேர்க்கவும்.
  • நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளுங்கள்.
  • பின்னர் முதலில் உங்கள் முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு சுத்தம் செய்து உலர்த்தி கொள்ளுங்கள்.
  • பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
  • இறுதியாக மாய்ஸ்சரைசர் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
குறிப்பு - உங்களுக்கு பால் அழற்சி இருந்தால் யோகார்ட்டை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன் முழங்கையில் சிறிது அப்ளே செய்து பரிசோதனை செய்து கொண்டு அப்புறம் உபயோகிக்கவும்.

இவ்வாறு செய்வதனால் வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் ஏ, பி மற்றும் ஈ போன்ற சத்துக்கள் மற்றும் இதிலுள்ள பொட்டாசியம் உங்கள் சரும நிறத்தை மெருகேற்றும்

யோகார்ட் உள்ள ஆல்பா ஹைட்ராக்ஸில் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. முகத்திலுள்ள பருக்கள், சரும பிரச்சனைகள், சருமம் வயதாகுதல் போன்றவற்றை போக்கி சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தையும் நிறத்தையும் கொடுக்கிறது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers