வெயிலுக்கேற்ற இரண்டு பேஸ்பேக்

Report Print Trinity in அழகு

வெயிலினால் ஏற்படும் முக கருமை, அழுக்கு, வியர்வை கிருமிகள் போன்றவற்றை நீக்கி பொலிவிழந்த முகத்தை பொலிவாக்குகிறது கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த எளிமையான இரண்டு குறிப்புகள் . பயன்படுத்தி பலன் பெறவும்.

அரிசி மாவு பேஸ்பேக்

அரிசிமாவு சருமத்தின் நிறத்தை மீட்டெடுத்துக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது . முகம் பொலிவாகவும் பளிச்சென்றும் மென்மையாகவும் மாற அரிசி மாவு பேக் பயன்படுத்த வேண்டும்.

செய்முறை

அரிசி மாவு 3 ஸ்பூன் பால் 3 ஸ்பூன்

அரிசி மாவு மற்றும் பாலை ஒன்றாக கலக்கி பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். இதனை முகம் முழுவதும் தடவி அரைமணி நேரம் காயவைக்கவும். காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விட வேண்டும். வாரம் மூன்று முறை இவ்வாறு செய்து வர முகம் பொலிவாகும். நிறம் சீராகும்.

உருளைக்கிழங்கு பேஸ்பேக்

உருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங் தன்மை சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. மேலும் இறந்த செல்களையும் நீக்குகிறது. இதன்மூலம் செய்யப்பட்ட பேஸ்பேக் பயன்படுத்துவதால் முகத்திற்கு பிரகாசத்தை தருவதோடு வெயிலால் கருமையடைந்த முகத்தின் நிறத்தையும் மாற்றலாம்.

தேவையான பொருள்

உருளைக்கிழங்கு 1

ஒரு உருளைக்கிழங்கை எடுத்து சிறிது சிறிதாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டி அதன் சாறை மட்டும் எடுத்து கொள்ளவும்.

அதன்பின் ஒரு பஞ்சு உருண்டையில் இந்த சாறை ஊற்றி முகம் முழுவதும் பேக் போல போடவேண்டும். இதன் பின் 15 நிமிடம் காய வைத்து முகம் கழுவி வர வேண்டும். தினமும் இது போல செய்து வர வேண்டும். இதனால் முகம் பளிச்சென்று ஆகும்.

இந்த பேக்குகள் போட்டு கழுவி முடித்தபின் சிறிது மாய்ஸ்சுரைசர் தடவி கொள்ள வேண்டியது அவசியம். காரணம் அரிசி மற்றும் உருளை கிழங்கு தோலில் உள்ள நீர்த்தன்மையை வற்ற செய்து விடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers