கருவளையத்தை போக்க இதனை செய்திடுங்கள்

Report Print Kabilan in அழகு

கண்களின் கீழே உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் சேதத்தினால், கண்களின் கீழே உள்ள தோல் கருப்பாக காணப்படுகிறது.

இதனைத் தவிர காயங்கள், கண்களை சரியாக கவனிக்காதது, சத்துக் குறைபாடு போன்றவற்றினாலும் கண்களின் கீழே உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த வகை கருவளையங்களை போக்குவதற்கான இயற்கை முறை வழிகளை இங்கு காண்போம்.

ஐஸ் கண்களில் ஏற்படும் கருமைக்கான அறிகுறிகளைக் குறைக்கிறது. எனவே, ஐஸைப் பயன்படுத்தி கண்களின் கீழே உள்ள சேதமடைந்த ரத்தக்குழாய்களை சரி செய்யலாம். மேலும், ஐஸ் அவற்றை மரத்துப் போகச்செய்து, வலியைக் குறைக்கும்.

ஐஸ் கட்டியைக் கொண்டு கண்களைச் சுற்றி ஒத்தடம் கொடுத்தால், கண்கள் மிகவும் பாதுகாக்கப்படும்.

சூடான அழுத்தத்தினை கண்களைச் சுற்றி கொடுக்கும் போது, கண் கருமை நீங்கும். மேலும், கண்களுக்கு கீழே ஏற்படும் வீக்கத்தையும் இது சரிசெய்யும். இவ்வாறு கண்களை சுற்றி அடிக்கடி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை என்பது அழற்சியை போக்கும் மருத்துவ குணம் கொண்டதாகும். கற்றாழையை பயன்படுத்துவதன் மூலம், ரத்த நாளங்கள் சரி செய்யப்பட்டு கண்களைச் சுற்றி ஏற்படும் கரும்படலம் நீங்கும்.

கற்றாழை ஜெல்லை கண்களைச் சுற்றி உள்ள தோலின் மீது மென்மையாக தடவ வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் கரும்படலத்தின் அடர்த்தி குறையும்.

பப்பாளி கூழில் பயனுள்ள என்ஜைம்கள் உள்ளதால் இது சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது. பப்பாளி கூழை கண்களின் கீழே உள்ள தோலில் தடவி வர, கண்களின் கீழே உள்ள ரத்த நாளங்கள் சரி செய்யப்பட்டு, தோலில் ஏற்படும் ரத்தப் போக்கு குணமாகும்.

மஞ்சள் தூளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. எனவே, மஞ்சள் தூளை பசை போல் செய்து, சருமத்தின் மேல் தடவ வேண்டும். தினமும் இதனைத் தொடர்ந்து, இரண்டு முதல் மூன்று முறை செய்து வர வேண்டும். இதன்மூலம், கண்களைச் சுற்றி ஏற்பட்ட கரும் படலம், அதனால் உண்டான வலி மற்றும் அழற்சி ஆகியவை குணமாகும்.

தேன் நமது சருமத்திற்கு நன்மை செய்யும் அருமருந்து ஆகும். தேனில் உள்ள அழற்சி மற்றும் எதிர்ப்பு பண்புகள் வலியையும், அழற்சியையும் குறைக்கும். ரத்தப்போக்கு ஏற்படுத்தும் ரத்த நாளங்களை குணமாக்கும். தேனை நேரடியாக பாதிக்கப்பட்ட தோலின் மீது தடவினால் வலி குறையும். இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் கண்களின் கருமையை விரைவில் போக்கலாம்.

தேங்காய் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. எனவே, இதனை தோல் மீது தடவி வர வேண்டும். இதன்மூலம் கண்களின் கரும்படலத்தினால் ஏற்படும் அழற்சி மற்றும் வலி ஆகியவை நீங்கும். அத்துடன் கண்களின் கீழே ஏற்படும் வெடிப்பையும் சரி செய்து, தோலுக்கு ஈரப்பதத்தினை தந்து மிருதுவாக்கும்.

சந்தனப்பொடியை தோலின் மீது தடவி வந்தால், கண்களின் கீழே உள்ள கரும்படலம் நீங்கும். இதனைத் தொடர்ந்து செய்வது நன்மை பயக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்