முகத்தில் குழிகள் அதிகம் இருக்கா? ஈஸியா மறைக்க டிப்ஸ்

Report Print Fathima Fathima in அழகு

முகத்தில் குழிகள் இருந்தால், முக அழகு கெடுவதுடன் பல்வேறு சருமப் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.

இதனை சில பேஸ் மாஸ்க்குகள் போடுவதன் மூலம் சரிசெய்யலாம்.

  • வெள்ளரிக்காயை துருவி, அதில் சிறிது ரோஸ்வாட்டர் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும், இப்படி செய்தால் மேடு பள்ளங்கள் மறையும்.
  • முட்டையின் வெள்ளைகருவை முகத்தில் தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவவும், வாரம் ஒருமுறை இதை செய்தால் பலன் கிடைக்கும்.
  • நன்கு கனிந்த பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் பலன் கிடைக்கும்.
  • தக்காளியை அரைத்து முகத்தில் தடவி மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
  • கடலை மாவில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவலாம், இதனால் குழிகள் மட்டுமின்றி முகமும் பளபளப்பாகும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers