மூக்கை சுற்றி அசிங்கமான வெண்புள்ளியா? இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

பொதுவாக பலருக்கு மூக்கை சுற்றி சொரசொரவென்று வெள்ளைப்புள்ளிகள் இருக்கும். அதற்கு சிலர் மார்கெட்டுகளில் அழகு சாதண பொருட்களை வாங்கி தற்காலிகமாக மூக்கை சுற்றி காணப்படும் வெள்ளைப்புள்ளிகளை போக்குவதுண்டு.

இதற்கு சில எளிய இயற்கை வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன இவற்றை நீங்களும் செய்து பாருங்கள். நாளடைவில் பலன் பெறலாம்.

செய்முறை 1
 • ஒரு பௌலில் ஓட்ஸ் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
 • பின் அதை வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
 • பின்பு வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி, அப்பகுதியை மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.
 • இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், வெள்ளைப்புள்ளிகள் வருவதைத் தடுக்கலாம்.
செய்முறை 2
 • ஒரு சிறிய கிண்ணத்தில் தக்காளி சாறு 1 ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு 1/2 டீஸ்பூன் இவை இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
 • பின் அதை முகத்தில் வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.
 • பின்பு கிளின்சர் பயன்படுத்தி, நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
செய்முறை 3
 • ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் க்ரீன் டீயை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
 • பின் அந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
 • பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
 • இந்த மாஸ்க்கை ஒருவர் வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
செய்முறை 4
 • ஒரு பௌலில் ஒரு வைட்டமின் ஈ கேப்ஸ்யூல், டீ-ட்ரீ ஆயில் 3 அல்லது 4 துளிகள் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.
 • பின் அதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.
 • பின்பு 5-10 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.
 • இந்த செயலை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், வெள்ளைப்புள்ளிகள் வராமல் தடுக்கலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers