உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்கலாம்: ஒரே வாரத்தில் பலன்

Report Print Printha in அழகு

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால் அது உதட்டிற்கு மேல் முடி வளர்வது தான்.

இம்மாதிரி உதட்டிற்கு மேலே முடி வளர்வதற்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் முக்கிய காரணமாக உள்ளது. அதனை போக்க சில டிப்ஸ்கள் உள்ளது.

டிப்ஸ் - 1

1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் பால் ஆகியவை சேர்த்து பேஸ்ட் செய்து உதட்டிற்கு மேல் தடவி நன்கு காய வைத்த பின் நீர் பயன்படுத்தி மென்மையாக மேல் நோக்கியவாறு ஸ்கரப் செய்ய வேண்டும்.

இறுதியில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், உதட்டின் மேல் வளரும் முடியின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

டிப்ஸ் - 2

1 முட்டையின் வெள்ளைக்கரு, 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை ஆகியவை கலந்து கொள்ள உதட்டிற்கு மேல் பகுதியில் தடலி, 15-20 நிமிடம் கழித்து முடி வளரும் எதிர் திசையை நோக்கி உரித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

டிப்ஸ் - 3

3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் தேன் ஆகியவை சேர்த்து சூடேற்றி இறக்கி அதில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து உதட்டிற்கு மேலே தடவி, காட்டன் துணியை வைத்து, உரித்து எடுக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

டிப்ஸ் - 4

இரவு தூங்கும் முன் துவரம் பருப்பை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து அதனுடன், உருளைக்கிழங்கு ஜூஸ், தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவை கலந்து உதட்டிற்கு மேலே தடவி 15-20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், உதட்டிற்கு மேலே முடி வளர்வதைத் தடுக்க முடியும்.

டிப்ஸ் - 5

சோள மாவு மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து அதை உதட்டிற்கு மேலே தடவி நன்கு காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின் உரித்து எடுக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், முடியின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers