கருவளையம் காணாமல் போக இதை செய்யுங்கள்

Report Print Thuyavan in அழகு

சிலருக்கு மீன் போன்ற கண்கள் இருந்தாலும், முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் கண்களின் கீழுள்ள கருவலையங்கள் ஒட்டுமொத்த அழகையும் பாதிக்கிறது.

இதற்கு ஊட்டச்சத்து குறைபாடு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

அளவுக்கதிகமாக டி.வி பார்ப்பது, புத்தகம் படிப்பது, கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பது, இரவு ஷிஃப்ட் என்கிற பெயரில் தூக்க முறையையே மாற்றிக் கொள்வது போன்றவை கருவளையங்களுக்கு முக்கிய காரணங்களாகும்.

உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரியில் உள்ள ஸ்டார்ச் கருவளையங்களுக்கு மிக நல்ல மருந்தாகும். திக்கான டீ டிகாக்ஷனை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து. அதில் பேப்பர் மாதிரி மெலிதாக வெட்டிய பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக்கொண்டு 5 முதல் 7 நிமிடங்கள் ஓய்வெடுத்தால் கருவலயங்களை தவிர்க்கலாம்.

தாமரைப்பூ இதழ்களை மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அதில் 10 மி.லி. விளக்கெண்ணெயும், 10 மி.லி. தேனும் கலந்து 7 மணி நேரம் வெளியே வைக்கவும். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு, கண்களைச் சுற்றி பேக் போலத் தடவி, 1 மணி நேரம் கழித்துக் கழுவினால் பயனடையலாம்.

இதுமட்டுமல்லாமல் பாதம், புதினா, மஞ்சள் , எலுமிச்சை போன்ற எளிதில் கிடைக்கும் பொருட்களை வைத்தும் கருவலையங்களை தவிர்க்கலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்