பொலிவான சருமம் வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க

Report Print Santhan in அழகு

ஆக்ஸிஜன் நிறைந்த சுத்தமான இரத்தம் உடலில் இருந்தால் போதும் எல்லா உள்ளுறுப்புகள் மற்றும் சருமம் எல்லாம் ஆரோக்கியமாக செயல்படும்.

இதன்மூலம் நாம் சீக்கிரம் வயதாகாமல் இருக்கலாம். இதற்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டிய அவசியமில்லை.

சமையலறை பொருட்களை கொண்டே அழகை மேம்படுத்தலாம். அதன் மூலம் இளமையான பொலிவான சருமத்தையும் பெற முடியும்.

தேன்

வயதாகுவதை தடுப்பதில் தேன் ஒரு சிறந்த பொருளாக செயல்படுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வயதாகுவதை தடுக்கும் இயற்கை கெமிக்கல்கள் போன்றவை இவற்றில் உள்ளன.

நூறு வருடங்கள் ஆனாலும் பாட்டிலில் உள்ள தேன் கெட்டு போகாமல் அப்படியே இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

தேவையான பொருட்கள்

சுத்தமான தேன் - 1/2 டீ ஸ்பூன்

செய்முறை

தேனை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.

20 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்.

இதை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்ற விதத்தில் செய்தால் நல்ல பலனை காணலாம்.

முட்டையின் வெள்ளை கரு

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஜிங்க், புரோட்டீன் போன்றவை உள்ளன.

இவை சரும கொலாஜன் உருவாக்கத்திற்கும் சரும மிருது தன்மைக்கும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

வெள்ளை கரு - 1

மில்க் க்ரீம் - 1/2

லெமன் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து முகத்தில் தடவி கொள்ளவும்.

15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்