முடி அடர்த்திக்கு இயற்கை தீர்வுகள்

Report Print Kavitha in அழகு

தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பதால் முடி வளர்ச்சி அதிகரிக்கும், தினமும் ஒரு கால் டீஸ்பூனாவது ஸ்கால்ப்பில் இருக்கும்படி பார்த்து கொண்டால் தலை சூட்டினால் முடி உதிர்வதை தடுக்கப்பட்டு முடி அடர்த்தியாக வளரும்.

இதற்கு அருமையான தீர்வு ஆயுர்வேத வழிமுறையே ஆகும், முடி அடர்த்தியை அதிகரிக்க கீழ்வரும் முறைகளை கையாளுவோம்.

வெந்தயம் மற்றும் சீரகம்

வெந்தயம் மற்றும் சீரகத்தை இரவே ஊற வைத்து, அதனை மறு நாள் ஊற வைத்த நீருடனே அரைத்து தலையில் தடவுங்கள்.

20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும், இவ்வாறு வாரம் இரு நாட்கள் அல்லது தினமுமே செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.

எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி அதில் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதனை தலையின் வேர்ப்பகுதியில் மசாஜ் செய்து அரை மணிநேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள். வாரம் ஒருமுறை அல்லது வாரம் இருமுறை செய்து வந்தால் முடி அடர்த்தி பெறும்.

கற்றாழை மற்றும் பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயில் கற்றாழை ஜெல்லை நன்றாக கலக்கி தலையில் தடவுங்கள், சில நிமிடங்கல் மசாஜ் செய்யவும்.

ஒரு மணிநேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள், இது கூந்தலுக்கு மென்மையை தந்து நல்ல கண்டிஷனராக விளங்குகிறது.

விளக்கெண்ணெய் மற்றும் தேன்

விளக்கெண்னெயை சூடுபடுத்தி அதில் தேன் கலந்து கொள்ளுங்கள், இந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

அரை மணிநேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள், இவ்வாறு வாரம் 2 முறை செய்வதனால் முடி வழுவடைந்து அடர்த்தியாக வளரும்.

கருவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்

கருவேப்பிலையை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் என்ணெயை சூடுபடுத்தி, அதில் கருவேப்பிலை விழுதைப் போட்டு சலசலப்பு அடங்கும் வரை குறைந்த தீயில் வைக்கவும்.

ஸபின்னர் அடுப்பை அணைத்து, லேசாக சூடு ஆறியதும் அதனை தலைமுழுவதும் தடவ வேண்டும், பின் 5 நிமிடங்கள் மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலச வேண்டும்.

வாரம் ஒருநாள் இதை தொடர்ந்து செய்து வந்தால் இளநரையையும் போக்கி கூந்தல் அடர்த்தியாக வளரும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்