நெல்லிக்காயை இந்த வழிகளில் பயன்படுத்துங்கள்: முடியே உதிராது

Report Print Printha in அழகு
609Shares
609Shares
ibctamil.com

மரபணு, முறையற்ற உணவுகள், நீண்ட நாள் நோய் மற்றும் மன அழுத்தம் ஆகிய பிரச்சனைகள் முடி உதிர்வதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

இப்பிரச்சனைக்கு தீர்வு தரும் நெல்லிக்காயை எந்த வடிவில் பயன்படுத்தினால் பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நெல்லிக்காயை எப்படி பயன்படுத்த வேண்டும்?

  • நெல்லிக்காயை கொண்டு மசாஜ் செய்து வந்தால் தலை சருமத்தில் இருந்து தேவையற்ற செதில்களை நீங்கி, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

  • நெல்லிக்காய் பொடி, வெந்தய பொடி மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்து தலையில் தடவி 15-30 நிமிடம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.

  • நெல்லிக்காய் பொடி, சீயக்காய் பொடி மற்றும் வாதுமை ஆகியவை கலந்த பேஸ்ட்டை தலை சருமத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து அலச வேண்டும்.

  • நெல்லிக்காயின் சாற்றை நேரடியாக தலையில் தடவலாம் அல்லது தினமும் நெல்லிக்காய் சாறை குடித்து வரலாம், இதனால் முடி உதிர்வு குறையும்.

  • காய்ந்த நெல்லிக்காய் துண்டுகளுடன், நெல்லிக்காய் எண்ணெய்யை தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வதை தடுக்கலாம்.

  • உணவில் நெல்லிக்காயை ஜூஸ், ஊறுகாய் மற்றும் வேகவைத்து போன்ற வடிவில் சாப்பிட்டு வந்தாலும் முடி உதிர்வதை தடுக்கலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்