எந்த இடத்தில் தழும்புகள் உள்ளது? விரைவில் போக்கும் எண்ணெய் இதுதான்

Report Print Printha in அழகு
146Shares

முகத்தில் பருக்கள், தழும்புகள் வந்தால் அவை விரைவில் போகாது. ஆனால் அவற்றை போக்க சில இயற்கை தீர்வுகள் நல்ல பலனை கொடுக்கும்.

அப்படிப்பட்ட தீர்வுகளில் ஒன்று தான் விட்டமின் E எண்ணெய். இது தழும்புகளை போக்குவதில் சிறந்த தீர்வளிக்க உதவுகிறது.

நன்மைகள்

  • விட்டமின் E எண்ணெய்யை தழும்பு உள்ள இடத்தில் தடவினால் அவை விரைவில் குணமாகும்.

  • விட்டமின் E சேர்க்கப்பட்ட ஆயிண்ட்மென்ட் அல்லது க்ரீம்களை சருமத்தில் பயன்படுத்தலாம். அதனால் சருமம் சுத்தமாகும்.

  • தோல் புற்றுநோய் குணமான பின் உண்டாகும் தழும்புகள் மறைய விட்டமின் E எண்ணெய்யை பயன்படுத்தினால் அவை மறைய 90% வாய்ப்புகள் உள்ளது.

  • அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க ஒரு நாளில் 3 முறை விட்டமின் E எண்ணெய்யை பயன்படுத்தினால் போதும்.

  • வைட்டமின் ஈ எண்ணெய்யை உணவாக அல்லது மாத்திரையாக உள்ளுக்குள் எடுத்துக் கொள்வதால் வேறு பல நன்மைகளும் உடலுக்கு கிடைக்கிறது.

  • விட்டமின் E எண்ணெய்கள் காயங்களை ஆற்றவும், நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளான ப்ரீ ரேடிக்கல்களிடம் இருந்து உடல் திசுக்களை பாதுகாக்கவும் உதவுகிறது.

  • விட்டமின் E நிறைந்த இலைகளை உடைய பச்சை காய்கறிகள், நட்ஸ், தானியங்கள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடலாம்.

குறிப்பு

விட்டமின் E மாத்திரைகளை அளவுக்கு அதிகமாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அதனால் ரத்தத்தின் அடர்த்தியை குறைத்து மூளையில் ரத்தபோக்கை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்