முகத்தில் ஸ்பூனை வைத்து மசாஜ் செய்யுங்கள்: அப்பறம் தெரியும் அற்புதம்

Report Print Printha in அழகு

சரும சுருக்கம், சொரசொரப்புத்தன்மை போன்ற சரும பிரச்சனையை போக்கி முகம் மிருதுவாகவும், பொலிவுடனும் காட்சியளிக்க ஸ்பூன்களை கொண்டும் மசாஜ் செய்யலாம்.

அப்படி செய்வதன் மூலம் சருமத்தில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, சரும பொலிவு மற்றும் புத்துணர்ச்சியை அதிகரிக்க செய்யலாம்.

தேவையான பொருட்கள்
  • ஸ்பூன்கள் - 2
  • ஆலிவ் ஆயில் - 1 கப்
  • குளிர்ந்த நீர் - 1 கப்
  • பனிக்கட்டி - சிறிதளவு
ஸ்பூன் மசாஜ் செய்வது எப்படி?

முதலில் முகத்தை நன்றாக கழுவி பருத்தி துணியால் துடைத்து கொள்ள வேண்டும்.

அதன் பின் எண்ணெய்யில் ஸ்பூனை ஒரு நிமிடம் வைத்து விட்டு, ஸ்பூனின் பின் பகுதியை முகத்தில் மென்மையாக அழுத்தி நாடி, கன்னம், நெற்றி, மூக்கு கண் இமை போன்று முகத்தின் அனைத்து பகுதியிலும் மென்மையாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.

ஸ்பூனில் வெதுவெதுப்பு தன்மை குறைந்து போனால் மீண்டும் எண்ணெயில் சிறிது நேரம் மூழ்க வைத்து விட்டு மசாஜை தொடர வேண்டும்.

தினமும் குறைந்தபட்சம் 10 நிமிடமாவது மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்து முடித்தவுடன் சுத்தமான நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும்.

குளிர்ந்த நீரில் ஐஸ்கட்டி சேர்த்து அதில் ஸ்பூனை போட வேண்டும். அந்த ஸ்பூன் நன்கு குளிர்ந்த நிலையை அடைந்த பின் ஸ்பூனின் பின்பகுதியை கண் இமைகளின் மேல் வைத்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

ஸ்பூன் சூடான நிலையை அடைந்தால் மீண்டும் குளிர்ந்த நீரில் நனைத்து பயிற்சியை தொடர வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கண்களின் அடியில் இருக்கும் தசைப்பை நீங்குவதுடன் முகம் பளப்பளப்பாகும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்