சரும அழகினை அதிகரிக்க இனி இந்த ஒரு பழம் போதும்!

Report Print Kavitha in அழகு
463Shares

பழங்காலத்தில் அழகிற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களில் ஒன்று தான் திராட்சை, இதில் விட்டமின் சி நிறைந்துள்ளது.

அதுமட்டுமின்றி ஏராளமான அளவு ஆண்டி ஆக்ஸிடண்டுகளும் நிறைந்துள்ளன.

சருமத்தினை சுருக்கங்கள், கரும்புள்ளிகள், கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்க திராட்சை உதவுகின்றது.

திராட்சையை அழகிற்காக எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

  • இரண்டு அல்லது மூன்று கருப்புதிராட்சையை அரைத்து அதில் ஒரு டிஸ்பூன் யோகர்ட் சேர்த்து நன்றாக கலந்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து நன்றாக கலந்து கழுத்து மற்றும் முகத்திற்கு பூசி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும், இவ்வாறு தினசரி செய்து முகம் பளபளப்பாக காட்சியளிக்கும்.
  • திராட்சையை மென்மையாக அரைத்துக் கொண்டு அதில் முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன் ஆகிவற்றை கலந்து முகத்திற்கு பூசி 15 நிமிடம் கழித்து கழுவி வந்தால் எண்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.
  • திராட்சையை பேஸ்ட் போல் அரைத்து அதில் அரிசி மாவு மற்றும் கேரட்சாறு என்பவற்றை நன்றாக மிக்ஸ் செய்து முகத்திற்கு மற்றும் கழுத்துக்கு தடவி 30 நிமிடம் கழித்து கழுவி வந்தால் சருமத்தில் உள்ள துளைகள் நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும்.
  • திராட்சையுடன் தேன் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும், இவ்வாறு செய்வதால் முகம் பளிச்சென்று இருக்கும்.

  • திராட்சையை மட்டும் அரைத்து முகத்திற்கு மட்டும் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • திராட்சை மற்றும் பப்பாளியை ஒன்றாக அரைத்து முகத்திற்கு போட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.
  • திராட்சைகளையும் சிறிதளவு சீஸை எடுத்து அதனுடன் கலந்து முகத்திற்கு போட்டு வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.
  • இரண்டு ஸ்பூன் திராட்சை சாறையுடன் ஆரஞ்ச் ஜூஸ் சிறிதளவு எடுத்து முகத்தில் தடவி பூசி வருவதால் முகம் பொலிவு பெரும்.
  • திராட்சையுடன் சிறிதளவு பேக்கிங் சோடா, சிறதளவு கோதுமை மாவு ஒன்றாக கலந்து முகத்திற்கு பேக் போட்டு வந்தால் முக அழகை மேலும் மெருகேற்றும்.
  • திராட்சை மற்றும் சிறிதளவு புதினா இலைகளை அதனுடன் எலுமிச்சை சாறையும் உடன் சேர்த்து நன்றாக கலந்து முகத்திற்கு பேக் போட்டுவந்தால் பளிச்சிடும் முகத்தை எளிதாக பெறலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்