முகத்தில் உள்ள சதையை குறைக்க என்ன செய்யலாம்?

Report Print Printha in அழகு

உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் தொப்பை, கை சதைகள், தொடை சதைகள், இடுப்பு சதைகள் மற்றும் முகத்தில் உள்ள சதைகளை குறைப்பதற்கும் டிப்ஸ்கள் உள்ளது.

அதன் அடிப்படையில் முகத்தில் சதைகள் அதிகரிப்பது ஏன்? அதை குறைப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

முகத்தில் சதைகள் அதிகரிப்பது ஏன்?

ஜங்க் ஃபுட், நீர்ச்சத்து குறைபாடு, குடிப்பழக்கம் பரம்பரை, கிட்னி பிரச்சனை, சைனஸ், அலர்ஜி, பல் தொடர்பான பிரச்சனை ஆகியவை காரணமாக முகத்தில் சதைகள் அதிகரித்து முகம் குண்டாக காணப்படுகிறது.

முகத்தில் உள்ள சதையை குறைப்பது எப்படி?
  • தினமும் நம் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீரை குடிக்க வேண்டும் அல்லது நீர்ச்சத்து மிக்க இளநீர், மோர், பழச்சாறு வெள்ளரிக்காய், தர்பூசணி, தக்காளி, ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
  • உணவுகளில் அதிகப்படியாக உப்பு சேர்ப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். இதனால் முகம் குண்டாகுவதை தடுப்பது மட்டுமின்றி பல உடல் உபாதைகள் வராமலும் தடுக்கலாம்.
  • வாழைப்பழம், கேரட், கீரை வகைகள் போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் முகத்தின் சதை கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
  • காய்கறி, பழங்கள் போன்ற இயற்கையான உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். அதேபோல ஒரே நேரத்தில் அதிகப்படியாக வயிறு முட்டும் அளவிற்கும் சாப்பிடக்கூடாது.
  • முகத்தில் அதிக சதை ஏற்படுவதற்கு போதிய ஓய்வு இல்லாததும் ஒரு காரணம், எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 7-8 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
  • கூன் முதுகிட்டு உட்காருவது கூடாது, ஏனெனில் அப்படி உட்காருவதால் இடுப்பு பகுதி மற்றும் தாடைப் பகுதியில் அதிகப்படியான சதை சேர்ந்துவிடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...