உடல் எடையை குறைத்தது எப்படி? கீதாஞ்சலி செல்வராகவன் சொல்லும் ரகசியம்

Report Print Printha in அழகு

இயக்குனர் செல்வராகவன் காதல் கதைகளை வித்தியாசமான திரைக்கதையாக தொகுப்பதில் இளைஞர்களிடம் சிறந்த புகழ்பெற்றவர்.

இவருக்கு திருமணம் ஆன போது குண்டாக இருந்த இவரின் மனைவி கீதாஞ்சலி, தற்போது ஸ்லிம் பியூட்டியாக ஜொலிக்கிறார்.

இந்த ஸ்லிம் சீக்ரெட் குறித்து இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, குண்டாகயிருக்கிறேன் என்ற காரணத்தால் எடையைக் குறைக்க வேண்டும் என்றெல்லாம் நான் எடையைக் குறைக்கவில்லை.

எனக்கு இடுப்பில் பிரச்சனை இருந்தது, இடுப்பில் உள்ள எலும்பு சேரும் இடத்தில் வலி இருந்தது.

இது பதினைந்து வருடங்களுக்கு முன்னால் இருந்தே இருந்தது, அதனால் டாக்டர் எனக்கு அட்வைஸ் பண்ணியிருந்தார்.

எடையைக் குறைத்தால் உடல்நிலைக்கு நல்லது என்று, அதனால் உடல்நலத்தை பாதுகாக்கவே நான் உடல் எடையைக் குறைத்தேன்.

உடல் எடையைக் குறைக்க டாக்டர் எனக்கு 2 வருடம் நேரம் கொடுத்தார். அதனால் இரண்டு வருடமாகப் போராடி என் எடையைக் குறைத்தேன்.

என் இடுப்பு எவ்வளவு எடை இருந்தால் உடல்நலத்திற்கு நல்லதோ அதற்கு ஏற்ற மாதிரி குறைக்க ஆரம்பித்தேன்.

சென்னை மெட்ராஸ் கிளப்பில் உறுப்பினராக நான் இருக்கிறேன். அதனால் அங்குச் சென்று தான் ஒர்க்அவுட் பண்ணினேன்.

கார்டியோ பயிற்சியை இரண்டு மணிநேரம் பண்ணினேன். நடப்பேன், 20 நிமிடம் ஓடுவேன். 45 நிமிடங்கள் மற்ற சில பயிற்சிகளையும், 30 நிமிடம் நீச்சல் பயிற்சியையும் செய்வேன்.

இவை தவிர டயட் இருந்தேன். டயட் இருப்பது தான் ரொம்ப கஷ்டம். ஆனால் வெஜிடேரியன் டயட் எனக்கு ஈஸி. நிறையப் பச்சை காய்கறிகள், மீன், முட்டை இதையெல்லாம் சாப்பிட்டேன்.

இது அனைத்தையும் விட கஷ்டமான ஒரு விடயம் சுரைக்காய் ஜூஸ் குடிப்பது தான். அதை குடிக்கவே முடியாது. ஆனால் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடுப்பேன்.

அதன் பின் நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை ஜூஸை குடிப்பேன். அதுவும் உப்பு, சர்க்கரை எதுவும் சேர்க்காமல் அப்படியே ஒரு டம்ளர் குடித்ததும், நிலவேம்பு கசாயம் குடிப்பேன்.

நான் ஹெல்த்தியான டயட்டை எடுத்துக் கொண்டதால், இரண்டு வருடங்கள் இவற்றை பின்பற்றினேன்.

இப்போது நான் என் எடையைக் குறைத்து கிட்டத்தட்ட பத்து மாதங்கள் ஆகப் போகிறது. என்னுடைய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் நான் எனது புகைப்படங்களை அடிக்கடி போடுவேன்.

ஆனால், என் குடும்பத்தில் இருப்பவர்களும் என் நண்பர்கள் மட்டும் என் புகைப்படத்தை பார்க்கும்படிதான் வைத்திருப்பேன்.

அதனால் நிறையப் பேருக்கு நான் எடை குறைத்த விடயம் தெரியாமல் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...