வழுவழுப்பான சருமம், எந்த ஒரு மாசு மருவும் இல்லாத மின்னும் மேனி என்று அழகில் ஜொலிக்கும் கொரிய நாட்டு பெண்களின் அழகின் ரகசியங்கள் இதோ,
கொரிய நாட்டு பெண்களின் அழகு ரகசியம்?
- கொரியப் பெண்கள் எண்ணெய் பசையுள்ள ஸ்க்ரப்பைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் இது சருமத் துளைகளில் உள்ள அழுக்கை அகற்றி, சரும வறட்சி அடையாமல் தடுக்கிறது.
- முகத்திற்கு சோப்புக்கு பதிலாக ஃபேஸ் வாஷ் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் இது சருமத்தில் உள்ள செல்களை உடனடியாக குளிர்விக்க உதவுகிறது.
- முகத்திற்கு ஸ்ட்ராபெர்ரி பழத்தை குழைத்து அதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் ஃபேஸ் பேக்காக தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் அது சரும நிறத்தினை அதிகரிக்கும். ஒவ்வொரு பதினைந்து நாளைக்கு ஒரு முறை இந்த பழங்கள் ஃபேஸ் பேக்கை போடுகிறார்கள்.
- தினமும் காலை, மாலை முகத்திற்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்கிறார்கள், இதனால் சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்குமாம்.
- குளித்த பின் அல்லது முகத்தை கழுவிய பின் டோனரை பயன்படுத்துகிறார்கள். இப்படிச் செய்வதால் சருமத் துளைகள் விரிவாகமல், சருமம் மிருதுவாக இருக்கும்.
- சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்க அவர்கள், சாஃப்ட் பிளாக் ஹெட்ஸ் ஸ்ட்ரிப்ஸ் பயன்படுத்துகிறார்கள். இது முகத்தில் சேர்ந்திடும் நுண்ணிய அழுக்குகளை கூட நீக்கி விடுமாம்.
- தினமும் வெளியில் செல்லும் போது சன்ஸ் கிரீன் லோஷனை பயன்படுத்துகிறார்கள். அதனை தவறாது பின்பற்றுவதால், அவர்களுக்கு புற ஊதாக் கதிர்களின் பாதிப்புகள் இருக்காதாம்.
- வெயிலில் தங்கள் உதடு நிறம் மாறிவிடாமல் இருக்க தினமும் லிப் மாஸ்க் பயன்படுத்துகிறார்கள். இதனால் உதடு வறண்டு விடாமல் இருக்கும்.
- கண்களை அழகாக காட்ட இவர்கள் ஜெல் பேஸ்டு ஐ சீரம் பயன்படுத்துகிறார்கள். இது கண்களைச் சுற்றியிருக்கும் சருமத்தை புத்துணர்வாக்க உதவுகிறது.