முகத்திற்கு பொலிவைத் தரும் தூய தேன்

Report Print Kavitha in அழகு

உடலிலும், உள்ளத்திலும் குறை ஏதும் உண்டானால் அதன் வெளிப்பாடும் முகத்தில் தெரியவரும்.

ஆரம்பக்காலக்கட்டங்களில் பெண்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து தான் முக அழகினை பராமரித்து வந்தார்கள்.

ஆனால் இன்றைய நாகரீக உலகில் முகத்திற்கு அழகு சேர்க்க சந்தையில் விற்கப்படும் பொருட்கள் ஏராளம். இப்படிப்பட்ட அழகு சாதன பொருட்கள் விளம்பரங்களினால் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்துக் கொண்டு இருக்கிறது என்பதே உண்மை.

முக அழகு பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்று தெரிந்தும் இவற்றை வாங்கி உபயோகிப்பதன் மூலம் நாம் பணத்தையும், அழகையும் இழப்பதுதான் மிச்சம். இதற்கு சிறந்தவழியாக நாம் இயற்கை வழியை கடைப்பிடிப்போம்.

முக அழகிற்கு சிறந்தவொரு இயற்கை பொருள் தான் தேன், இது சிறந்த மருந்து மட்டு மில்லை, ஒரு சிறந்த அழகு சாதனப் பொருளும் கூட. தேனை வைத்து முக அழகினை எவ்வாறு பராமரிக்கலாம் என்று பார்ப்போம்.

தேன்

தூய தேனை முகத்தில் முடியில் படாமல் தடவுங்கள். இது நல்ல மாய்ஸ்சரைஸராக முகத்திற்கு செயல்படும்.

பிறகு 20 நிமிடங்கள் ஊறிய பிறகு இளஞ்சூடான நீரினால் முகத்தைத் துடைக்கலாம், இவ்வாறு செய்வதனால் முகம் பிரகாசம் அதிகரிக்கும்.

தேன் மற்றும் ஆரஞ்சு

தேன் 1 ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் ,2 ஸ்பூன் இவற்றைக் கலந்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகம் பட்டுபோல் ஜொலிக்கும்.

தேன் மற்றும் இளநீர்

முகத்தைக் குளிர்ந்த நீரில் துடைத்து விட்டு, 1/4 கப் இளநீர், தேன் 1 ஸ்பூன் 2 தேக்கரண்டி முல்தானிமிட்டியை கலந்து முகம், கழுத்து மற்றும் கைகளிலும் பூசவும்.

பின் அரை மணி நேரம் ஊற விட்டு பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுதல் அவசியம். இவ்வாறு செய்வதனால் முகம் மட்டுமின்றி கால் கைகளும் பளீச் என்று மாறும்.

தேன் மற்றும் முட்டை

தேன் 1 ஸ்பூன், முட்டை வெள்ளை கரு இரண்டையும் ஒன்றாகக் கலந்து முகம் முழுவதும் பூசி சுமார் 20 நிமிடம் காயவைத்து பின் நன்கு குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் எண்ணெய் வழிந்த முகம் மாறி, முகம் பளிச்சிடும்.

தேன் மற்றும் எலுமிச்சை

எலுமிச்சம் பழச்சாறில் தேன் இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.

இப்படி 2 வாரம் ஒருமுறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத தழும்புகள் எல்லாம் போய் முகம் சிவந்து தெரியும்.

தேன் மற்றும் முட்டைகோஸ் இலைச்சாறு

ஒரு ஸ்பூன் பட்டர், முட்டைகோஸின் இலையில் சாறு எடுத்து கலந்து, அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும், பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட சருமத்தில் நிறம் சிவப்பாக காட்யளிக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்