அசிங்கமான தழும்பா? 2 வாரம் போதும்.. தீர்வு இதோ!

Report Print Printha in அழகு

முகத்தின் அழகை கெடுக்கும் தழும்புகளை 2 வாரத்தில் போக்குவதற்கு அற்புதமான தீர்வுகள் இயற்கையில் ஏராளமாக உள்ளது.

அந்த வகையில், கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயை கொண்டு எளிதில் நல்ல தீர்வைக் காணலாம்.

தேவையான பொருட்கள்
  • கற்றாழை ஜெல் - 1/4 கப்
  • தேங்காய் எண்ணெய் - 1/4 கப்
  • நறுமண எண்ணெய் - சில துளிகள்
தயாரிக்கும் முறை

ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை கலந்து 5 நிமிடங்கள் வரை நன்றாக கலக்க வேண்டும்.

பின் அதனுடன் நறுமண எண்ணெய் சில துளிகளை சேர்த்து நன்றாக கலந்து, அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து மூடி அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை

தினமும் இதை குளித்தவுடன் முகத்தில் உள்ள தழும்புகளில் தடவி, பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், தழும்புகள் 2 வாரத்தில் மறைந்து விடும்.

மேலும் இந்த கலவை தோலில் ஏற்படும் சுருக்கங்கள், தழும்புகள் மற்றும் புள்ளிகளை குணமாக்கி, தோலை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் மாற்றி, பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்களை நீக்க உதவுகிறது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments