தலைமுடி கொட்டுதா? பொடுகு தொல்லையா? இதோ இருக்கே அற்புதமான தீர்வு

Report Print Printha in அழகு

தலைமுடி உதிர்வு, வழுக்கைப் பிரச்சனை, இளநரைமுடி, போன்ற அனைத்து வகையான கூந்தல் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இயற்கையில் சில அற்புதமான தீர்வுகள் இதோ!

  • வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து, அந்த நீரில் தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

  • கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

  • வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

  • வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

  • இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

  • ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ ஆகியவற்றை இடித்து தூள் செய்து, தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி, ஊறவைத்து தலைக்கு தேய்த்து வந்தால், முடி கருப்பாக வளரும்.

  • காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால், முடி கருமையாகும்.

  • நரைமுடியை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால் நரைமுடி பிரச்சனை போய்விடும்.

  • முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது தலைமுடியின் வளர்ச்சியை தூண்டி, அடர்த்தியாக வளர உதவுகிறது.

  • முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி அதை தினமும் தலையில் தேய்த்து குளித்து வரலாம்.

  • கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

  • சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவி வந்தால், முடி நன்றாக வளரும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments