சீக்கிரம் வெள்ளையாகலாம்.. க்ரீன் டீயுடன் இந்த பொருட்களை சேர்த்து கொள்ளுங்கள்

Report Print Printha in அழகு

க்ரீன் டீயானது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகை அதிகரிக்கவும் உதவும்.

ஏனெனில் அதற்கு க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன்கள் போன்றவை முக்கிய காரணமாகும்.

க்ரீன் டீயுடன் எந்தெந்த பொருட்களை சேர்க்க வேண்டும்?

  • 2 ஸ்பூன் அரிசி மாவுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் க்ரீன் டீ ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

  • 1/2 கப் மில்க் க்ரீம், சிறிதளவு க்ரீன் டீ மற்றும் 1 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.

  • க்ரீன் டீயுடன் சிறிது எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி, நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

  • க்ரீன் டீயுடன், தேன் மற்றும் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் வறட்சியான சருமம் வராது.

  • கற்றாழை ஜெல்லுடன் க்ரீன் டீ, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

குறிப்பு

மேல் கூறப்பட்டுள்ள பொருட்களை க்ரீன் டீயுடன் கலந்து, முகத்தில் தடவி வந்தால், சருமத்துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, இறந்த செல்களும் நீங்கி, முகம் பிரகாசமாகவும் வெள்ளையாகவும் இருக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments