ஒரே வாரம் தான்.. முகத்தில் உள்ள கருமை காணாமல் போகும்! இதை போடுங்க

Report Print Jubilee Jubilee in அழகு
2003Shares

தற்போது மாறி மாறி வரும் பருவ நிலையால் சருமத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கிறது.

இதனால் சருமம் கருமையடைவதோடு சருமத்தில் உள்ள செல்கள் பாதிப்படைந்து முதுமை தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

இதற்கு சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர், சன்ஸ்க்ரீன் போன்றவற்றைப் பயன்படுத்துவதோடு, அவ்வப்போது ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த நிலையில் ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள கருமையை போக்கி முகத்தை பொலிவாக மாற்றும் ஒரு அற்புத பேஸ் பேக்கை எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.

செய்முறை

  • முதலில் 1/4 கப் சாதத்தை நன்கு மசித்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். சாதத்தில் லினோலியிக் அமிலம், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை உள்ளதால் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும்.
  • மசித்து வைத்த சாதத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கொள்ள வேண்டும். எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும்.
  • பின்பு அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், சிறிது தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
  • பிறகு சருமத்தை தண்ணீரால் ஈரப்படுத்திக் கொண்டு, தயாரித்து வைத்துள்ள பேஸ்டை முகம், கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து நன்கு காய வைக்க வேண்டும்.
  • பின்பு வெதுவெதுப்பான நீரால் சருமத்தைக் கழுவி, பின் குளிர்ந்த நீரால் சருமத்தைக் கழுவி துணியால் துடைத்து பின்னர் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments