அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் இந்த ஜூஸ் போதும்! நன்மைகளோ ஏராளம்

Report Print Printha in அழகு

ஒழுங்கற்ற சருமப் பராமரிப்புகள், போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது இது போன்ற காரணங்களினால் தான் நமது சருமம் பொலிவை இழந்துக் காணப்படுகிறது.

எனவே இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு, போதிய அளவு தினமும் தண்ணீர் குடிப்பதுடன், நமது சருமத்தில் தேங்கி இருக்கும் அழுக்குகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றுவதற்கு பலவகையான பழங்களின் ஜூஸ்களை தினமும் ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கேரட் ஜூஸ்

கேரட்டில் விட்டமின் A அதிகமாக உள்ளது. இதனால் தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், நமது உடம்பில் இருக்கும் ப்ரீராடிக்களை வெளியேற்றி, நம்முடைய சருமத்தை சுத்தமாகவும், இளமையாகவும் பாதுகாக்கிறது.

மாதுளை ஜூஸ்

நமது உடம்பில் உள்ள பழைய செல்களை அழித்து, புதிய செல்களை உருவாக்கும் தன்மை மாதுளையில் உள்ளது. எனவே நாம் தினமும் மாதுளம் பழத்தின் ஜூஸை குடித்து வந்தால், நமது சருமப் பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, ஆரோக்கியமான சருமத்தை தருகின்றது.

திராட்சை ஜூஸ்

திராட்சையில், ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் அதிகம் உள்ளது. எனவே திராட்சைப் பழத்தில் தினமும் ஜூஸ் செய்து குடித்து வந்தால், நமது சருமம் புத்துணர்ச்சி பெற்று, சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

செர்ரி ஜூஸ்

செர்ரிப் பழத்தில் நமது உடம்பிற்கு தேவையான நீர்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் இது நமது சருமத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சருமத்தின் ஆரோக்கியத்தையும், நிறத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.

தக்காளி ஜூஸ்

தக்களி பழத்தில் லைகோபைன் என்ற ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் ஏராளமாக உள்ளதால், இவை நமது சருமத் துகள்களை சுருங்கச் செய்து, முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையை கட்டுப்படுத்துகிறது.

வெள்ளரிக்காய் ஜூஸ்

தினமும் ஒரு டம்ளர் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், நமது உடம்பில் இருக்கும் டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, சருமத்தின் நிறத்தை அதிகரிக்கச் செய்கிறது.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் விட்டமின் C ஆனது, சூரியக் கதிர்கள் மூலம் பாதிப்படையும் நமது சருமத்தின் செல்களை தடுத்து, கொலாஜெனை உற்பத்தி செய்கிறது. இதனால் நமது முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து, எப்போதும் இளமையான தோற்றத்தை தருகிறது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments