முகத்திற்கு உடனடி பளபளப்பு தரும் அவகோடா

Report Print Arbin Arbin in அழகு

சருமத்தில் சுருக்கம் வராமலும் அழகாகவும் வைத்திருக்க பராமரிப்பு அவசியம். அதற்கு பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவ்வகையில் அவகோடா மிகச் சிறந்த அழகு சாதனப் பொருளாகும்.

அவகோடாவில் அதிக அமினோ அமிலங்கள் இருக்கின்றன. அவை சருமத்தில் ஈரப்பதம் அளிக்கின்றன.

சுருக்கங்களை போக்கும், இளமையான சருமத்தை தரும், முக்கியமான சென்ஸிடிவ் சருமத்திற்கு ஆரோக்கியமானது.

வறண்ட சருமத்திற்கு:

  • அவகோடா மசித்தது - 2 ஸ்பூன்
  • தேன் - 2 ஸ்பூன்
  • மாம்பழம் - 2 ஸ்பூன்

மேலே சொன்னவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் பொறுத்து கழுவினால் உடனடியாக முகம் பளபளப்பதை பார்ப்பீர்கள்.

சாதரண சருமம்:

  1. யோகார்ட் - அரை கப்
  2. அவகோடா - கால் கப்
  3. தேன் - கலக்க தேவையான அளவு

அவகோடாவை நன்றாக மசித்து எல்லாவற்றையும் கலந்து முகத்தில் போடவேண்டும், 20 நிமிடங்கள் பொறுத்து கழுவுங்கள்.

எண்ணெய் சருமத்திற்கு:

  • அவகோடா - 2 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் - 1ஸ்பூன்
  • கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன்

இவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவுங்கள், 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments