வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பெண்... இடம் மாறியிருந்த பொருட்கள்: பின்னர் தெரியவந்த அதிரவைத்த உண்மை

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா
319Shares

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் வாழும் பெண் ஒருவர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, தன் வீட்டில் ஏசி ஆன் செய்யப்பட்டிருப்பதையும், வீட்டின் பின் கதவு திறந்திருப்பதையும், சமையல் அறையில் பாதி சமைக்கப்பட்ட நிலையில் மாமிசம் இருப்பதையும் கண்டு திடுக்கிட்டுள்ளார்.

ஏற்கனவே Monica Green என்னும் அந்த பெண் தன் வீட்டு பாதுகாப்பு கமெரா ரிப்பேர் ஆகியிருப்பதை கவனித்திருந்தார்.

வீட்டிலுள்ள பொருட்கள் எல்லாம் இடம் மாறியிருக்க, எல்லாம் சேர்ந்து சேர்ந்து திகிலை ஏற்படுத்த, பொலிசாருக்கு தகவலளித்துள்ளார் Monica. பொலிசார் வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் கூரைப்பகுதியில் இருந்த திறப்பின் மூடி விலகியிருப்பதைக் கவனித்துள்ளனர்.

thesun

மேலே ஏறி, அந்த இடத்தை பார்வையிட்ட பொலிசார் கூறிய செய்தியைக் கேட்டு நடுங்கிப்போனார் Monica.

ஆம், அந்த வீட்டின் கூரைப்பகுதியில், ஒரு நபர் மூன்று வாரங்களாக வாழ்ந்துவந்துள்ளார் என்ற செய்திதான் அது.

இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், வீட்டின் பூட்டுக்களை மாற்றிவிட்டு என்ன நடக்குமோ, ஒருவேளை அந்த நபர் இரவில் வந்து தங்களைக் கொன்றுவிடுவாரோ என்ற அச்சத்தில் வாழ்ந்துவருவதாக தெரிவிக்கிறார் Monica.

thesun

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்