புதிய கட்டணச் சட்டத்துக்கு எதிராக அவுஸ்திரேலியாவை அச்சுறுத்தும் கூகுள்!

Report Print Ragavan Ragavan in அவுஸ்திரேலியா
60Shares

உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்தும் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்தால், ஆஸ்திரேலியாவில் கூகிள் தேடுபொறியை முடக்குவதாக அந்நிறுவனம் அச்சுறுத்தியுள்ளது.

அவுஸ்திரேலிய அச்சு ஊடகங்கள் 2005-ஆம் ஆண்டிலிருந்து விளம்பர வருவாயில் 75 சதவிகிதம் சரிவைப் பதிவு செய்துள்ளன. இது பல செய்தி நிறுவனங்கள் மூடப்படுவதற்கோ அல்லது பல நிறுவனங்களில் பணியாளர்களை வேலையை விட்டு நிறுத்துவதற்கு வழிவகுத்தது.

இதனால், அவுஸ்திரேலியா அரசாங்கம் ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தை முன்மொழிந்துள்ளது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், கூகிள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள், ஆஸ்திரேலியாவின் செய்தி உள்ளடக்கங்களை பயன்படுத்துவதற்காக, உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு தங்கள் வருமானத்தை பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும்.

இதனால் கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய சட்டத்துக்கு தங்கள் எதிரிப்பை தெரிவித்துள்ளன.

கூகிள் நிறுவனம் ஒருபடி மேலே சென்று, இந்த சட்டத்தை நிறைவேற்றினால், அவுஸ்திரேலியாவில் கூகுள் Search Engineஐ முடக்கவுள்ளதாக அச்சுறுத்தியுள்ளது.

ஆனால், அவுஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மாரிசன் இதுபோன்ற "அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் பதிலளிப்பதில்லை, இந்த முடிவு ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இப்படித்தான் விஷயங்கள் செயல்படுகின்றன" என்றும் இந்த நிறுவனங்கள் நாட்டில் எவ்வாறு வணிகம் செய்யவேண்டும் என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கமே அதன் வித்துமுறைகளைக் கொண்டு தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார்.

ஆனால், அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட இந்த முடிவு அந்நாட்டு மக்களுக்கு பாதிப்பை அளிக்கும்.

ஏனெனில், அவுஸ்திரேலியாவின் 26 மில்லியன் மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 19 மில்லியன் மக்கள் கூகுளை பயன்படுத்துகின்றனர். அவர்கள் அனைவரும் இதனால் பாதிக்கப்படவுள்ளனர்.

இதற்கிடையில், முன்மொழியப்பட்ட சட்டத்தை "இடைநிறுத்த" வேண்டும் என்று ஆஸ்திரேலியாவிடம் அமெரிக்க அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், இந்த சட்டத்தை நிறைவேற்றுவது குறித்து தற்போது ஆஸ்திரேலிய அரசாங்கம் பரிசீலனை செய்துவருகிறது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்