குழந்தைகளுடன் முகாமிட்டிருந்த குடும்பம்: பார்பிக்யூ வாசனையை கண்டுபிடித்து வந்த ராட்சத உயிரினங்கள்

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் குழந்தைகளுடன் கேம்ப் ஒன்றிற்கு சென்றுள்ளது ஒரு குடும்பம்.

அப்போது அவர்கள் பார்பிக்யூ அமைத்து உணவு சமைத்துள்ளனர். சிறிது நேரத்தில் அந்த உணவின் வாசனையை முகர்ந்தபடி ஏதோ வரிசையாக ஊர்ந்து வருவதை கவனித்துள்ளனர் உடும்பத்தினர்.

அவை மூன்று அடி நீளமுடைய robber crabs எனப்படும் ராட்சத நண்டுகள்! வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் சுமார் 50 நண்டுகள் ஊர்ந்து வர, நாற்காலிகளில் அமர்ந்திருப்போர் கால்களை மேலே தூக்கிக்கொள்வதைக் காண முடிகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த ஒருவர், அவை குழந்தைகளை சாப்பிடுமா என்று கேட்க, பொதுவாக சாப்பிடுவதில்லை என சுற்றுலாத்துறையைச் சேர்ந்த ஒருவர் வேடிக்கையாக கூறியுள்ளார்.

இந்த நண்டுகள் உணவு தேடி வருமாம், வந்து உணவை எடுத்துக்கொண்டு சென்று விடுமாம், பொதுவாக அவை மனிதர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவதில்லை என கூறப்படுகிறது.

வீடியோவை காண

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்