3 குழந்தைகளை வயிற்றில் சுமந்து கர்ப்பமாக இருக்கும் பெண்! கணவன் குறித்து வந்த தகவல்.. வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம்

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் இளம்பெண்ணொருவர் மூன்று குழந்தைகளை வயிற்றில் சுமந்து கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் அவர் கணவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிஸ்பேனை சேர்ந்தவர் Matt Conwell (32). இவர் மனைவி Ashleigh தற்போது கர்ப்பமாக உள்ளார்.

அவர் வயிற்றில் மூன்று குழந்தைகள் வளருவதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

Matt கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த நிலையில் Ashleigh மார்க்கெட்டிங் துறையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக தம்பதிக்கு வேலை பறிபோனது.

இந்த சுழலில் நிதி பற்றாக்குறையால் அவதிப்பட்டு வந்த Matt சாலையில் செல்லும் கார் முன்னால் பாய்ந்து திடீரென சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த செய்தியை அறிந்த அவர் மனைவி Ashleigh அதிர்ச்சியடைந்தார்.

Mattன் நண்பர் Clint Freebody கூறுகையில், நான் கடைசியாக மார்ச் மாதம் 22ஆம் திகதி தான் அவனை பார்த்தேன்.

இந்த முடிவை அவன் எடுப்பான் என நினைக்கவில்லை என கூறியுள்ளார்.

இதனிடையில் Matt - Clint தம்பதியின் நண்பர்கள்,உறவினர்கள் தற்போது $180,000 நிதியை வசூலித்து கர்ப்பிணி Clint யிடம் கொடுத்துள்ளனர்.

ஏனெனில் கணவன் இறந்துவிட்ட நிலையில் பிறக்கவுள்ள மூன்று குழந்தைகளை அவர் பார்த்து கொள்ள வேண்டிய நிலை எற்பட்டுள்ளதால் இவ்வாறு உதவியுள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்