காட்டுத் தீக்கு பின் கடும் மழையில் சிக்கிய அவுஸ்திரேலியா! காலநிலையில் ஏற்பட்டுள்ள அபார மாற்றம்

Report Print Abisha in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வெல்ஸ் தற்போது மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறது.

அவுஸ்திரேலியாவில், நியூசவுத் வெல்ஸ், விக்டோரியா உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் காட்டு தீயின் கோரத்தாண்டவம் பல லட்ச கணக்கான உயிர்களை அழித்தது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அவுஸ்திரேலிய கடலில் Damien என்ற புயல் உருவாகியது. எப்போது மழை பெய்யும் என்று ஏங்கி கொண்டிருந்த மக்களுக்கு தற்போது மாறுபட்ட காலநிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, நியூசவுத் வேல்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் கடும் மழை பெய்து வருகிறது.

இதனால், சிட்னியில் உள்ள முக்கி சாலைகள் பல மூடப்பட்டுள்ளன. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், இந்த மழையின் அளவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர்.

தற்போது வரை Byron Bay மற்றுமி் Coffs Harbour பகுதிகளில், 250 மில்லி மீற்றர் முதல் 280 மில்லி மீற்றர் அளவிலான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Byron Bay (pictured here) has recorded 281mm of rain since Thursday
இந்த மழை வாரம் முழுக்க தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தீயினால் பாதிக்கப்பட்டு வரண்டு காணப்படும் பகுதிகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போதும் 43இடங்களில் காட்டுதீ பற்றி எரிவதாக தீயணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர்.

மேலும், Damien புயல் மேற்கு அவுஸ்திரேலியாவை தாண்டவம் ஆடியுள்ளது. பலத்த காற்றில் சிக்கி பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

கடந்த மாதத்தில் கடும் வெயில் மற்றும், தீயினால் பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களுக்கு இது சற்று ஆறுதலை தந்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்