மூன்று மாதங்களுக்கு பின் கட்டுக்குள் வந்த காட்டுத் தீ ... அவுஸ்திரேலிய அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Abisha in அவுஸ்திரேலியா

மூன்று மாதங்களாக கட்டுக்கு பின் அவுஸ்திரேலிய காட்டுத் தீயின் கோரத்தாண்டவம் முடிவுக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக அவுஸ்திரேலியாவின் நீயூ சவுத் வேல்ஸ், சிட்னி, விக்டோரியா உள்ளிட்ட மாகாணங்களில் காட்டுத் தீ தொடர்ந்து எரித்து வந்தது.

இந்த காட்டுத்தீயை எதிர்த்து போராடி வந்த தீயணைப்பு வீரர்கள், நீ சவுத் வேல்ஸ் பகுதியில், கட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், ஆனால், சிட்னி வடமேற்கு பகுதிகளில் கட்டுப்பாட்டை மீறி தீ எரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நீயூ சவுத் வேல்ஸ் தீயணைப்பு பிரிவு ஆணையர், Shane Fitzsimmons, தற்போதும் சிறிய அளவில் எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், பெரிய அளவிலான தீ கட்டுக்குள் வந்துவிட்டது. இதற்கு மேல் இயற்கைதான் ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து நீயூ சவுத் வேல்ஸ் கிராம தீயணைப்பு வீரர், இந்த தகவல் எங்களுக்கு கிறிஸ்மஸ், பிறந்தநாள், நிச்சையதார்த்தாம், திருமணம், புதிய வருடம், பட்டம் பெறுதல் போன்ற நாளாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்