அவுஸ்திரேலியா காட்டுத் தீ: பிழைத்த உயிரினங்களுக்கு உணவு வழங்கும் அரசு

Report Print Abisha in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா காட்டுத் தீயில் பிழைத்த உயிரினங்களுக்கு உணவு ஊட்ட அவுஸ்திரேலியா அரசு 4000பவுண்ட் வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து காட்டுத் தீ படர்ந்து வருகின்றது.

குறிப்பிட்ட சில பகுதிகளில், காட்டு தீ அணைக்கப்பட்டாலும் அங்குள்ள வெப்பமான காலநிலை காரணமாக காட்டு தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

இந்நிலையில், அவுஸ்திரேலிய அரசு காட்டுத்தீயில் பிழைத்து வாழும் காட்டு விலங்குகளுக்கு இனிப்பு உருளைகிழங்கு மற்றும் கேரட் ஆகியவை உணவுகளாக வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

இதற்கு 4000 பவுண்ட் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

NSW GOVERNMENT

இது குறித்து பேசிய நீயூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர், Matt Kean “இப்போது நீடித்துள்ள வறட்சி எங்களுக்கு மன அழுத்ததை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த வாரத்தில் 2000பவுண்ட் மதிப்பிலான இனிப்பு உருளைகிழங்கு மற்றும் கேரட் விலங்குகளுக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது.

இயற்கையில் கிடைக்கும் உணவுகள் இல்லமல் மற்ற உணவுகள் வழங்கப்படுவது கங்காருபோன்ற உயிரினங்களுக்கு உகந்ததாக இருக்காது” என்றும் அவர் தெரிவித்தார்.


நீயூ சவுத் வேல்ஸ் பகுதியில் மட்டும் 8000 மில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் தீயில் கருகி பலியாகியுள்ளதாக சிட்னி பல்கலை கழக சுற்றுசூழல், பிரிவு அதிகாரி Chris Dickman தெரிவித்துள்ளார்.

NSW GOVERNMENT

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்