காட்டுத்தீ பற்றியெரியும் அவுஸ்திரேலியாவில் மீண்டும் தீப்பற்றவைத்த நபர்: கையும் களவுமாக பிடித்த மக்கள்!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், ஒரு இடத்தில் மீண்டும் தீப்பற்றவைத்த நபர் ஒருவரை மக்களே கையும் களவுமாக பிடித்தனர்.

விக்டோரியா பகுதியில் வேன் ஒன்று வெகு நேரமாக சந்தேகத்திற்குரிய நிலையில் நிற்பதைக்கண்ட பொதுமக்கள் சிலர் அங்கு சென்று பார்க்கும்போது, அங்கு ஒருவர் புதர் ஒன்றை கொளுத்திக்கொண்டிருந்ததைக் கண்டுள்ளனர்.

மக்களைக் கண்டதும் அவர் வேனை எடுத்துக்கொண்டு தப்பியோட முயல, மக்கள் அவரை துரத்திப் பிடித்துள்ளனர்.

அவர் நியூ சவுத் வேல்ஸை சேர்ந்த Michael Truong (36) என்று தெரியவந்தது. ஏற்கனவே விக்டோரியா பகுதியில் அரை பில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியதுடன், மூன்று பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில், Truong தீவைக்கும் முயற்சியில் சிக்க, மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளார்கள்.

தீ உடனே அணைக்கப்பட்டதுடன், Truongம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட, நீதிமன்றம் முன் கூடியிருந்த மக்கள் ஆத்திரத்துடன் Truongஐ கொல்லவேண்டும் என்றும், நீதிமன்றத்தின் முன்னாலேயே தூக்கிலிடவேண்டும் என்றும், சவுக்காலடிக்க வேண்டும் என்றும், காட்டுத்தீயிலேயே அவரை தூக்கிப்போட வேண்டும் என்றும் சத்தமிட்டனர்.

இதற்கிடையில், Truongஐ பிடித்து, தீயை அணைத்து, மீண்டும் ஏற்பட இருந்த ஒரு பேரழிவை தடுத்த பொதுமக்களை பொலிசார் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்