அவுஸ்திரேலியா தீ! பரப்பபடும் வரைபடத்தின் உண்மை தன்மை?

Report Print Abisha in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பரப்பபட்டு வரும் வரை படங்களின் உண்மை தன்மை வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் வரைபடம் என்று குறிப்பிட்டு, அதன் பகுதிகள் முழுவதும் எரிந்து கொண்டிருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலானது. இதை பிரபல பாடகர் ஒருவரும் பகிர்ந்தார்.

ஆனால், அந்த புகைப்படம் Anthony Hearsey என்பவர் வரைந்த அவுஸ்திரேலியாவின் தரவுகள் மட்டுமே. இதுகுறித்து நாசாவும் உறுதி செய்துள்ளது.

மேலும், நாசான் செய்தியில், இது மிகைப்படுத்தப்பட்டுள்ள படம் மட்டுமே. இதில் உண்மைகள் இல்லை என்று கூறியுள்ளனர்.

மேலும், மற்றொரு புகைப்படமும் அதிகம் பகிரப்பட்டுள்ளது. அதில், குறிப்பிட்டுள்ள பகுதிகள் அனைத்து எரிந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் எரிகின்ற பகுதிகள் அனைத்தும் வெப்பத்தை குறிப்பதாக அதை வெளியிட்ட அரசு இணைய தளம் தெரிவித்துள்ளது.

அவை எரிக்கின்றது என்பதை குறிக்கவில்லை, வெப்பம் அதிகம் உமிழப்படும் பகுதி மட்டுமே என்று கூறியுள்ளது. மேலும், அவற்றில் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் வெப்பமும் அடங்கும் என்று தெரிவித்துள்ளது.

அதே போன்று பரபரப்பட்டுள்ள மற்றொரும் வரைப்படத்தில், பல இடங்கள் பாதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது, தீயணைப்பு நிலையங்களின் சார்பில் வெளியிடப்பட்டது வரைப்படம். அதில் குறிப்பிட்டுள்ளவை தீயை அல்ல. அவை பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்ட இடங்கள் மட்டுமே என்று கூறியுள்ளனர்.

உண்மையான பகுதிகள் என்று குறிப்பிட்டு பிபிசி வெளியிட்ட வரைப்படம்

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்