இன்று வெப்பம் அதிகரிக்கும்: அவுஸ்திரேலியாவுக்கு கடும் எச்சரிக்கை!

Report Print Abisha in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் இன்று வெப்பம் அதிகரித்து காட்டுத்தீ மேலும் பரவலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் காட்டுத்தீ பரவி வருகின்றது. இதனால், பல மில்லியன் கணக்கான வன உயிரிக்கள், காடுகள், மனித வாழிடங்கள் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த காட்டு தீயில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் தற்போதுவரை பலியாகியுள்ளனர்.

ஆனால், கடந்த சில நாட்களாக அங்கு காலநிலை இதமாக உள்ளது. குறிப்பாக கடந்த ஞாயிற்று கிழமை நீயூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவில் மழை பெய்தது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.

தொடர்ந்து இன்று காலநிலை நிச்சயம் தீவிர வெப்பத்தை தரும் என்றும், அதனால் மீண்டும் கடும் காட்டுத்தீ உருவாகும் என்று அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அது அடுத்த 48 மணி நேரத்திற்கு தொடரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சிட்னி, விக்டோரியா ஆகிய பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

அங்கு காட்டுத்தீயும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் பத்திரமான இடத்திற்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து மக்கள் தரப்பில், உலகின் அதிக அளவு நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடுகளில் அவுஸ்திரேலியா உள்ளது. அந்த பணியை குறைத்து சுற்றுசூழலில், பாதுகாப்பிற்கு அரசு புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்