20 பசுக்களை சுட்டுக்கொன்ற விவசாயி: வெளியான சோகப் பின்னணி!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் தனக்கு சொந்தமான 20 பசுக்களை விவசாயி ஒருவர் சுட்டுக்கொன்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பல பகுதிகள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளது உலகறிந்த செய்திதான். தீயில் சிக்கி மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் உயிரிழந்துள்ளன.

இந்நிலையில், Coolagolite என்ற பகுதியைச் சேர்ந்த Steve Shipton என்னும் ஒரு விவசாயி தன்னுடைய 20 பசுக்களை சுட்டுக்கொன்றுள்ளார்.

அவரது பண்ணையை துவம்சம் செய்த தீ, அவரது கால்நடைகளையும் விட்டுவைக்கவில்லை.

அவை தீயில் சிக்கி கடுமையாக காயமடைந்துள்ளன. தீக்காயம் பட்டு தவிக்கும் தனது கால்நடைகளைக் கண்டு மனம் உடைந்துபோன Steve, அவை படும் பாட்டைக் காண சகிக்காமல் அவற்றை சுட்டுக்கொன்றுள்ளார்.

தனது கால்நடைகளில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 20 பசுக்களை அவர் கருணைக்கொலை செய்துள்ளார்.

பசுக்களை சுட்டுக் கொன்று விட்டு, பச்சைக் குழந்தை போல Steve கண்ணீர் விட்டு அழ, அவரது சக விவசாயிகள் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...