புதுமண தம்பதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தந்தை: நடுங்க வைக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தந்தை ஒருவர் புதிதாக திருமணமான தமது மகளையும் மருமகனையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்ட 25 வயது புதுமணப்பெண் லிண்டிதா முசாய் என்பவரின் பிரிந்து சென்ற தந்தையே புத்தாண்டுக்கு முந்தைய நாள் இந்த கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்.

செவ்வாய் அன்று பகல் 10.30 மணியளவில் வெட்டன் முசாய் என்பவரது குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த லிண்டிதாவின் தந்தை மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.

இதில் லிண்டிதா சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார். வெட்டன் முசாய் மருத்துவமனை செல்லும் வழியில் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

தமது மகளையும் மருமகனையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, வெளியேறி தற்கொலை செய்துகொள்ள முயன்ற அந்த 55 வயது நபரை பொலிசார் காயங்களுடன் மீட்டுள்ளனர்.

Credit: Facebook

வெட்டன் மூசாயின் உறவினர் ஒருவர் தெரிவிக்கையில், இன்று நாங்கள் என் அழகான உறவினர் வெட்டன் முசாய் மற்றும் அவரது தேவதை மனைவி லிண்டிடா முசாய் ஆகியோரை இழந்தோம்.

தற்போதைய சூழலில் நான் எப்படி உணர்கிறேன் என்பதை விளக்க கூட என்னால் முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

லிண்டிதாவுக்கும் வெட்டனுக்கும் சமீபத்திலேயே திருமணம் முடிந்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளம் ஜோடியை தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Credit: Facebook
Credit: Facebook
(Image: Nine)

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...