30,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் சிக்கியுள்ள காட்டு தீ- குழந்தைக்காக காத்திருந்த தம்பதிக்கு ஏற்பட்ட பெரும் சோகம்!

Report Print Abisha in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் நீ சவுத் வேல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி தீயணப்பில் ஈடுபட்ட தன்னார்வலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

20வயதாக Samuel McPaul-க்கு திருமணமாகி 18மாதங்கள் மட்டுமே ஆனநிலையில், அவரது மனைவி கற்பமாக உள்ளார். அந்த தம்பதியினர், குழந்தைக்காக மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்துள்ளனர். இந்நிலையில் Samuel காட்டு தீயை அணைக்க தன்னார்வலராக அந்த பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அதில், எதிர்பாரதவிதமாக அந்த தீயில் சிக்கி கொண்ட Samuel பரிதாபமாக உயிரிழந்ததுள்ளார். அவரருடன் 39 வயதாக நபர் ஒருவர் தீகாயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Samuel McPaul-ன் இழப்பு அவரது குடும்பத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்டு தீயில் 30,000க்கு அதிகமான வெளிநாட்டவர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை முன்னதாக உள்ளுர் வாசிகள் தடுத்ததாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...