புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையிறக்கப்பட்டு அவசர வழியில் வெளியேற்றப்பட்ட பயணிகள்

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

சிட்னி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

271 பயணிகளுடன் குவாண்டாஸ் ஏர்வேஸ் QF575 என்கிற விமானம், இன்று அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திலிருந்து பெர்த் நோக்கி புறப்பட்டுள்ளது.

அடுத்த 30 நிமிடங்களிலேயே ஏதோ கருகுவதை போல பயணிகள் உணர்ந்துள்ளனர். அதேசமயம் அறை முழுவதும் புகை நிரம்புவதை அறிந்த விமானி, உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு, விமானத்தை தரையிறக்கியுள்ளார்.

பின்னர் மூன்று அவசர வழிகள் ஏற்படுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.ஹைட்ராலிக் சிஸ்டம் செயலிழந்ததால் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என விமான நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.

இதுகுறித்து விமான செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ஏர் கண்டிஷனிங் அமைப்பால் சில ஹைட்ராலிக் திரவம் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். புகை ஏற்படுவதற்கான வேறு எந்த காரணங்களும் அறியப்படவில்லை. பொறியாளர்கள் சிலர் விமானத்தை ஆய்வு செய்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்