தூங்கி எழுந்தவுடன் வந்த தொலைபேசி அழைப்பு! திடீரென கோடீஸ்வரனாக மாறிய இளைஞர்

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் இளைஞருக்கு காலையில் வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து அவர் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

சிட்னியை சேர்ந்த 20களில் உள்ள இளைஞர் நேற்று காலை தூங்கி எழுந்தார், பின்னர் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்த போது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசிய லொட்டரி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உங்களுக்கு லொட்டரியில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்துள்ளது, நீங்கள் கோடீஸ்வரர் ஆக்விட்டீர்கள் என கூறினார்கள்.

இதை முதலில் நம்பாத இளைஞர் ஓன்லையில் அது குறித்து பார்த்த போது அவர் வாங்கிய லொட்டரி டிக்கெட்டுக்கு பெரிய அளவிலான பரிசு பணம் கிடைத்தது தெரியவந்தது.

இது குறித்து அதிர்ஷ்டசாலி இளைஞர் கூறுகையில், என்னால் இன்னும் இதை நம்பமுடியவில்லை, நான் இப்போது கோடீஸ்வரன் ஆகிவிட்டேன் என நினைக்கிறேன்.

எனக்கு கடன்கள் உள்ளது, பரிசு பணத்தை வைத்து முதலில் கடன்களை அடைப்பேன்.

பரிசு விழுந்துள்ளதால் எந்த கவலையும், மன அழுத்தமும் இல்லாத 2020 புத்தாண்டை எதிர்நோக்கியுள்ளேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...