உலகளவில் பிரபலமான சுற்றுசூழல் ஆர்வலரான சிறுமி கிரெட்டா துன்பெர்க்கை, பத்திரிக்கையாளர் ஒருவர் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
சுவீடன் நாட்டை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலரான சிறுமி கிரெட்டா துன்பெர்க் (16), உலகெங்கிலும் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
அவருடைய கருத்துக்களுக்கு பொதுமக்கள் பலரும் ஆதரவு தெரிவித்து, போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 2015ம் ஆண்டு பிபிசி பத்திரிக்கையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட Jeremy Clarkson, அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுமி கிரெட்டாவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
"அவள் பைத்தியம், ஆபத்தானவள். அவளுடைய முட்டாள்தனத்தால் சிறு குழந்தைகளுக்கு பயத்தையும், கவலைகளையும் ஏற்படுத்துகிறாள். அவள் மீண்டும் பள்ளிக்குச் சென்று வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" எனப்பேசியுள்ளார்.
நீர் நிலைகள் வெகுவாகக் குறைந்து வருவதால், குழந்தைகள் போராட்டத்திற்கு செல்ல வேண்டாம். மாறாக, பள்ளிக்குச் செல்லுங்கள், அறிவியல் கற்றுக் கொள்ளுங்கள், அதைப் பற்றி ஏதாவது செய்யுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.