ஈவு இரக்கமின்றி.. சாப்பிட வந்த நிறைமாத கர்ப்பிணியை சரமாரியாக அடித்து மிதித்த நபர்: கலங்க வைக்கும் காட்சி

Report Print Basu in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவன் நிறைமாத கர்ப்பிணியை சரமாரியாக அடித்து மிதித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிட்னி நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தின் போது, 3 பெண்கள் முக்காடு அணிந்த படி ஹோட்டலில் அமர்ந்திருந்துள்ளனர். அப்போது, அவர்களுக்கு அருகில் வந்த பேசிய நபர், திடீரென மூலையில் உட்கார்ந்திருந்த கர்ப்பிணி பெண்ணை எகிறி தாக்குகிறார்.

பின்னர், சரமாரியாக முகத்தில் குத்தி, கீழ விழுந்த பெண்ணை முகத்தில் மிதித்துள்ளார். உடனே அங்கிருந்த நபர்கள் தலையிட்டு நபரை தடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத்தாக்குதலில் ஈடுபட்ட 43 வயதான நபரை கைது செய்த பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது இஸ்லாமிய எதிர்ப்பு தாக்குதல் என தெரிவித்துள்ள இஸ்லாமிய ஆணையங்களின் அவுஸ்திரேலிய கூட்டமைப்பு, அந்த நபர் பாதிக்கப்பட்ட மற்றும் அவரது நண்பர்களிடம் இஸ்லாமிய எதிர்ப்பு வெறுப்பு உணர்வை வெளிப்படுத்தியதாக கூறியுள்ளது.

இது இனவெறி மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு தாக்குதல் என தெளிவாக தெரிகிறது. இது அவ்வாறு கருதப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என இஸ்லாமிய ஆணையங்களின் அவுஸ்திரேலிய கூட்டமைப்பு தலைவர் ரத்தேப் ஜ்னீட் தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்