உலக சாதனை படைத்த குவாண்டாஸ் விமானம்

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமானம் நீண்ட நேரம் வானில் பறந்து உலக சாதனை படைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் போயிங் 787-9 வகை குவாண்டாஸ் வர்த்தக விமானமானது ஒரு வரலாற்று சோதனை ஓட்டமாக, 49 பேருடன் நியூயார்க்கில் இருந்து நேற்று புறப்பட்டது.

இடையில் வேறு எங்கும் தரையிறங்காமல் 19 மணி 16 நிமிடங்களில் 16,200 கிமீ (10,066 மைல்) பாதையை கடந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தை அடைந்தது.

இதன்மூலம் வானில் அதிக தூரம் பறந்து குவாண்டாஸ் விமானம் உலக சாதனை படைத்துள்ளது.

இந்த பயணத்தின் போது விமானத்தின் தாக்கத்தை அறிய விமானத்தில் இருந்த பயணிகள் சிறப்பு சாதனங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டனர்.

தற்போதையை வெற்றியை தொடர்ந்து அடுத்த மாதம், லண்டனில் இருந்து சிட்னிக்கு இடைவிடாத விமானத்தை சோதிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வழித்தடங்களைத் தொடங்கலாமா என்பது குறித்து முடிவு செய்ய குவாண்டாஸ் எதிர்பார்க்கிறது.

இதில் முன்னேற்றம் ஏற்பட்டால், சேவைகள் 2022 அல்லது 2023 இல் செயல்படத் தொடங்கும்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்