இரட்டை பிறப்புறுப்பு, கருப்பைகள் கொண்ட இளம்பெண் 4 பிள்ளைகளின் தாயான அதிசயம்!

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா
745Shares

அவுஸ்திரேலியாவில் இரட்டை பிறப்புறுப்பு மற்றும் கருப்பைகள் அமைந்த பெண் ஒருவர் 4 பிள்ளைகளுக்கு தாயாரான சம்பவம் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியரான 34 வயது லாரன் காட்டர் தனது 16 வயதில் இருந்தே மாதவிலக்கு பிரச்சினையால் அவதியுற்று வந்துள்ளார்.

மட்டுமின்றி பி.சி.ஓ.டி. என்றழைக்கப்படும் சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்சினையும் இருந்து வந்துள்ளது.

மருத்துவ நிபுணரை சந்தித்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு uterus didelphys என்ற பிரச்சினை இருப்பதாக கண்டறியப்பட்டது.

இந்த பிரச்சினை உடைய பெண்கள் மிக அபூர்வம். இவர்களுக்கு கருப்பை, கருப்பை வாய், பெண் உறுப்பு என இனப்பெருக்க உறுப்புகள் இரட்டையாக அமைந்திருக்கும்.

இப்படியானவர்கள் திருமணமானாலும் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு குறைவு என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இருப்பினும் திருமணமாகி இயல்பான தாம்பத்திய வாழ்க்கை நடத்துவதற்கு வசதியாக அவர் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

ஆனாலும்கூட, இரட்டை கருப்பை பிரச்சினையால், கருச்சிதைவு நேரவோ அல்லது குழந்தை இறந்து பிறக்கவோ வாய்ப்பு உண்டு என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் லாரன் தமது 17 வயதில் பென் என்பவரை காதலித்தார். இவர்கள் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

பென்னுக்கு மற்றவர்களை போன்று தாங்களும் குழந்தை பெற்றுக்கொண்டு வாழ வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.

இந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு அக்டோபரில் லாரன் கருத்தரித்தார். அவரது வலது புற கருப்பையில் கருத்தரித்தது தெரிய வந்தது.

2014ம் ஆண்டு ஜூன் மாதம் அறுவை சிகிச்சை மூலம் அமேலீ என்ற அழகான பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார்.

பின்னர் ஒன்றரை ஆண்டுகள் கழிந்த நிலையில் லாரன் மற்றும் பென் தம்பதி இரண்டாவது ஒரு குழந்தை பெற்றெடுக்க விரும்பினர். இம்முறை லாரன் இடது புற கருப்பையில் கருத்தரித்தது. அறுவை சிகிச்சை மூலம் அவர் ஹார்வி என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அதன்பின்னர் கருத்தரிக்க வேண்டாம் என்று கருதி கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த விரும்பினர்.

ஆனால் கருத்தடை மாத்திரை எடுத்துக்கொண்டதால் லாரனுக்கு மைக்ரேன் தலைவலி வந்தது. அதை தொடர்ந்து மருத்துவரை அணுகி ஆலோசித்தபோது கருத்தடை சாதனத்தை பொருத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

அவரும் பொருத்திக்கொண்டார். இது 99 சதவீதம் நம்பகமான கருத்தடை சாதனம் என கூறப்படுகிறது.

இருப்பினும் அதை பொருத்திக்கொண்ட நிலையிலும், 3 வாரங்களில் லாரன் மீண்டும் அதிசயமாக கருத்தரித்தார்.

ஒரே கருப்பையில் இரட்டை கரு இருந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் லாரன், மாயா மற்றும் ஈவீ என இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

தற்போது இந்த இரட்டை குழந்தைகளுக்கு வயது 15 மாதம். இரட்டை இனப்பெருக்க உறுப்புகள் அமைந்ததால் பிள்ளை பிறப்பது கடினம் என கூறப்பட்ட நிலையில் லாரன் 4 பிள்ளைகளுக்கு தாயான சம்பவம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்